கொலையுதிர் காலம்
இந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன்று. இயக்குநர் மணிரத்னத்துக்கும் சுஜாதாவுக்கும் பொதுவான ஒரு விஷயம் - இருவருடைய படைப்புக்களும் காலத்தை மீறி நிற்பவை. அதனால் தானோ என்னவோ இருவருக்கும் ”ரோஜா, பம்பாய், தில் சே..., கன்னத்தில் முத்தமிட்டால்..” என நன்றாக பொருந்திப்போனது. சுஜாதாவின் 'கொலையுதிர்காலமு'ம் அந்த வரிசையில் இடம்பெற்றதே. இது எழுதப்பட்டது 1981-ல் என்றபோதும், 28 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கும்போது அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்துவதாக இருப்பது இதன் சிறப்பு. வழக்கம் போல ஒரு தொழிநுட்பத்தை எடுத்துக்கொண்டு சுஜாதாவால் அதை சுற்றி பின்னப்பட்ட ஃபார்முலா கதை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொழில்நுட்பம் இன்றும் வளர்ந்து வரும் நிலையிலேயே இருக்கிறது என்பது தான். அப்படியென்றால் சுஜாதா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று யூகித்துக்கொள்ளலாம். இருப்பினும் ‘கொலையுதிர்காலம்’ஒரே நிகழ்வை விஞ்ஞானத்தையும், பிசாசுகளை மையப்படுத்தும் பைசாசத்தையும் கொண்டு விவரிக்க முற்பட்டு அதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருப்பதிலும் ஒரு cult status-ஐ அடைகிறது. தங்கள் நம்பிக்கையை படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இத்தனை பீடிகைகளுக்கு உள்ளாகும் ‘கொலையுதிர் காலம்’ தான் என்ன?
பத்து செகண்ட் முத்தம்
டில்லியில் நடந்த 1983 ஆசிய விளையாட்டு போட்டியின் போது சுஜாதா எழுதிய இந்த கதை ஒரு காதல் கதை அல்ல. உலகளாவிய பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்த சில விநாடிகளுக்காவே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிக்கின்றனர். அவர்களுடைய சிந்தையும், உடம்பும் விளையாட்டையன்றி வேறு எதுவும் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் ரசி என்கிற தமிழரசி, தன் கோச் மற்றும் மாமாவான ராஜ்மோகனின் மேற்பார்வையில் உலக சாதனையை நிகழ்த்தும் முயற்ச்சியில் இருக்கிறாள். இடையில் ரிப்போர்ட்டர் மனோ மூலம் அவள் மனதில் காதல் நுழைகிறது. ராஜ்மோகனின் அளவுகடந்த கண்டிப்பும், சாதனை நிகழ்த்தும் முனைப்பும் காயப்படுத்தியிருந்த தமிழரசியின் மனதுக்கு இந்த காதல் அமிர்தமாக இனிக்கிறது. விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடும் மனநிலைக்கு போகிறாள் ரசி. தடுமாறிய ரசியின் விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் விளையாட்டுக்கு திருப்ப ஒரு பெறும் விலை கொடுக்கப்படுகிறது. மொத்தமே 2-3 நாட்களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாவல் கீழே வைக்க தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், மனதை தொடுவனவாகவும் உள்ளது. விசா பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள இந்த 104 பக்கங்களும், ரூ. 50/- விலையும் கொண்ட புத்தகம், நிச்சயம் உங்களை கவரும்.
24 ரூபாய் தீவு
சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை 'அப்படியே' எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்... இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.
சென்று வாருங்கள் சுஜாதா சார்
{mosimage}
பிரிவோம் சந்திப்போம் - 2
மனதில் நின்ற, higher benchmarks ஏற்படுத்திய ஒரு நாவலுக்கு sequel எனப்படும் இரண்டாம் பாகம் எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்பதை எண்டமூரியிடம் கேளுங்கள். மனிதர் 'துளசிதளத்'தில் score செய்து, அதை 'மீண்டும் துளசிதளத்'தில் தொலைத்தார். இப்போது சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' இரண்டாவது பாகத்தை படிக்கலாமா? வேண்டாமா? என்று ஏகப்பட்ட குழப்பங்கள். கடைசியாக 'சரி! புத்தகத்தை வாங்கிவிட்டோம் எனவே படித்து தான் வைப்போமே' என்று படிக்க ஆரம்பித்தேன். எனது 'worst fears come true' போல ஆரம்பித்த நாவல், கடைசியில் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டது. எனக்கு முன்பு என் அம்மா இதனை படித்துவிட்டார். எனவே அவரிடம் நிறைய இதனை பற்றி பேசினேன். A worthy sequel for a successful prequel.
பிரிவோம் சந்திப்போம் - 1
One thing leads to another... and we end up experiencing new pleasures.. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் முன்னுரையில் அதன் நாயகி நிதியை 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டு இருப்பார். எனவே கோவையில் புத்தகம் வாங்க போனபோது 'பிரிவோம் சந்திப்போம்'-இன் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். சுஜாதாவிடம் இருந்து ஒரு hard hitting stark நாவலை எதிபார்த்த எனக்கு இனிய அதிர்ச்சி. 24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சலசலத்திருக்கிறார்.
இரண்டாவது காதல் கதை
இது வைத்தியிடம் இருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். ஏதெங்கிலும் பயணத்தின் நினைவாக புத்தகங்கள் வாங்கி அந்த பயணத்தை பத்திரப்படுத்துவது. இந்த முறை கோவை சென்றபோது சென்ட்ரலில் உள்ள ஹிக்கின்போத்தம்ஸில் வாங்கியது சுஜாதாவின் 'இரண்டாவது காதல் கதை'. இதன் நடை சுஜாதாவின் 'அனிதாவின் காதல் கதை'யை ஒத்திருந்தாளும், இம்முறை கதையின் களம் Board Room Politics-ல் மையம் கொண்டுள்ளது. வாழ்க்கையை பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக்கொண்டு மகிழ்ச்சியாக நடமாடிக்கொண்டிருக்கும் நிதியின் வாழ்க்கையில் காதல் நுழைகிறது, கூடவே எதிர்ப்புக்களும். வாழ்க்கையை போல கட்டுப்பாடான ஆசானும் இல்லை. நிதியின் வாழ்க்கையில் இரண்டாம் காதல் நுழைகிறது. வழக்கமான தனது விறுவிறுப்பான நடையில், சுஜாதாவின் முத்தியரையோடு ஜிவ்வென பறக்கிறது இந்த 'இரண்டாவது காதல்'.