Kane & Abel

A really new experience in reading an English fiction. I didn't understand the controversies this novel courted when released as movie, but now when read it I can make out why it ruffled the Christians. Normally I read about 50-75 pages in an hour, but when it came to this book I could go in snail pace only. Dan Brown packs too much of details in each line, page and contexts. Also the vocabulary is of somewhat high standards for me that I have to look at the thesarus often. The backdrop the novel is set in offers a high voltage experience. The author engrosses you deeply that you can't feel like keeping the book down till you complete. More than the controversies of Jesus' lineage, I think there lies the beauty of respecting the feminity in the novel. Also I can draw similarities between the early Hinduism and other religions. In fact after reading this novel, I could understand that the religious phenomenon in supressing the women was universal. Even if you are not a religous fanatic, there is enough suspense in "Da Vinci Code" to hold your attention.
The second novel of late. Sydney Sheldon I have ever read. I am always fond of psychological thrillers and this one too dealt with the much discussed MPD (Multiple Personality Disorder). TMYD starts with a thriller note of the protagonist Ashley Patterson being feared of getting stalked. The following incidents just compounds her fears and her security is at stake. There are other two pratagonists Toni Prescott and Alette Peters, making fun of Ashley's "Miss Goody" image. There happens the murders of Ashley's colleague, a painter, a diamond merchant and a cop who is incharge of Ashley's security from her stalker. All the murders point to Ashley who is confused of herself being dragged to the brutal murders. First half is better, second half's court scenes and hospital episodes could have been better. However the second half makes up for the detailed research and can prove as documentation. A sense of "Deja-Vu" prevails through out the novel. Looks like Shankar had been "inspired" by this novel to make "Anniyan". But after reading this novel my respect for Madhu Muttom, who wrote "Manichitrathaazhu" much before TMYD rose highly because "Mani..." was more clear, linear and gripping than TMYD. Overall TMYD made an intresting read but doesn't deserve to be carried forever.
இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா? பழிவாங்கினானா? என்று விரியும் ஒரு சாதாரண கதை. இதை சுவாரசியமாகவும், வித்தியாசமாகவும் ஆக்குவது இதில் வரும் கிருஷ்ணனின் குருவான தாகூரின் கதாபாத்திரம். முடிவில் கிருஷ்ணன் தன்னை சமுதாயத்தின் பாதுகாவலாளியாக நியமித்துக்கொண்டு புரட்சி பாதை மூலம் பயணிக்க தொடங்குகிறான். பல இடங்களில் மிகவும் cliched-ஆக பயணிக்கும் இந்த நாவலை ஒரு முறை படிக்கலாம். பதிப்பு: அல்லையன்ஸ், 244 ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர் சென்னை. பக்கங்கள்: 216, விலை: ரூ. 50
இந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது எல்லோராலும் ஆடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த 'காதல் சதுரங்கமும்' அப்படிப்பட்ட ஒரு ஆட்டம் தான். காதலர்களை பிரிக்க அவர்கள் தந்தையர்கள் கட்டம் நகர்த்தும் சதுரங்கம். இது இந்திரா சௌந்தர்ராஜன் சன் டி.விக்காக எழுதிய தொடராம். இந்த நாவலை படிக்கும்போது ஆரம்பத்திலிருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது - இது visual medium-க்காக எழுத்ப்பட்டது என்ற். அந்த அளவுக்கு காட்சிகளை ஷாட் வாரியாக பிரித்து எழுதியிருக்கிறார் இந்திரா. தடதடவென்று காட்சிகள் மாறுவதால் படிக்கும் நமக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்வதில் வியப்பு இல்லை.
சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை 'அப்படியே' எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்... இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.
{mosimage}
{mosimage}
நான் படித்த பாலகுமாரனின் முதல் சரித்திர நாவல் (புதினம் என்று எழுதனுமோ?) - 'கடிகை'. அந்த காலத்தின் குருகுலத்தை, கல்வியிலும், ஆட்சியிலும் அந்தணர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் புத்தகம் இது. சரித்திர ரீதியாக எவ்வளவு உண்மை என்று ஆராயாமல் 'கடிகை'யை அந்த காலத்து வாழ்வின் Documentation என்ற மட்டில் ஏற்றுக்கொண்டால் மிக அற்புதமான அனுபவம். கிட்டத்தட்ட கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' parallel-ஆக பயணிக்கிறது இந்த கதை. 'பொன்னியின் செல்வனில் வந்த அருண்மொழிய்ம், ஆதித்த கரிகாலனும், குந்தவையும், வந்தியத்தேவரும், ரவிதாஸனும், வீரபாண்டியனும் இந்த புத்தகத்தில் வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் Negative Characters-ஆக வருகின்றனர். பொன்னியின் செல்வனை தீவிரமாக நேசிப்பவர்களுக்கு 'கடிகை' பிடிப்பது சற்று கடினமே.