காஜல் ”டார்லிங்” அகர்வால்
இன்று பிரபாஸ் - காஜல் அகர்வால் நடித்து கருணாகரன் இயக்கிய “டார்லிங் (2010)” படம் பார்த்த பிறகு ஏனோ எனக்கு காஜல் அகர்வாலை மிகவும் பிடித்து போனது. காஜல் அவர்வால் அழகான சிரிப்பும், உற்சாகமான கண்கள் கொண்ட நடிகை என்ற மட்டும் தான் இதுவரை எனக்கு அவர் மீது அபிப்பிராயம் இருந்தது. ஆனால் இன்று ‘டார்லிங்’ பார்த்தப்புறம் அந்த பெண்ணை குறித்து புதிதாக ஒரு ஈர்ப்பு தோன்றியுள்ளது. பொதுவாக Love specialist கருணாகரன் தனது கதாநாயகிகளை அழகாக present செய்பவர் என்ற கருத்து ஆந்திர சினிமா ரசிகர்களிடையே நிலவுகிறது. அந்த வகையில் “டார்லிங்” படத்தில் காஜல் ஒரு தேவதையை போல காண்பிக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை தான். அதிலும் ’மகதீரா’வின் மகத்தான வெற்றி காஜலுக்கு ஒரு தனி நம்பிக்கையையும், பொலிவையும் தந்திருப்பதால் ”டார்லிங்” படத்தில் அவருடைய அழகு கூடிப்போயிருப்பது போல ஒரு தோற்றம்.