Girls
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Ananyaஎனக்கு சமீபத்தில் சில நாட்களாக "எங்கேயும் எப்போதும்" ஜுரம் பிடித்துள்ளது. YouTube-‌ல் இந்த படத்தில் டிரைலர், ஜெய் - அஞ்சலி வரும் காட்சிகள், அஞ்சலியின் பேட்டி, "சொட்ட சொட்ட", "மாசமா ஆறு மாசமா", "உன் பேரே தெரியாது" என இந்த படத்தின் காட்சிகளாக எனது மொபைலில் பதிவிறக்கம் செய்து பயணிக்கும்போது பார்த்து வருகிறேன். இந்த படம் பார்த்த உடனேயே மிகவும் பிடித்து போனது - குறிப்பாக அஞ்சலி எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஈசியாக நல்ல பேரை தட்டிச்சென்று விட்டார். பின்னர் படத்தின் காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்கும்போது அனன்யாவை ஆவென்று வாய் பிளந்து பார்க்க தோன்றுகிறது. இதற்கப்புறம் தான் படத்தின் டிரலரையே பார்த்தேன் - அனன்யாவின் வெண்கல குரலில் கிசுகிசுப்பாக "எனக்கு புடிச்சவர தேடி வந்திருக்கேன்... என்னை தேடி அவர் இங்கே வருவாரு... அதுக்காக தான் வெயிட் பண்றேன்.. அதுவும் ரொம்ப நேரம் இல்லை... இந்த பஸ் கிளம்புற வரைக்கும் தான்.." என்று "சொட்ட சொட்ட.." பாடல் BGMல் மேலும், "கண்டிப்பா அவரு வருவாரு... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு" என்று சொல்லும்போது adrenalin rush ஜிவ்வென்று அதிகமாகிறது எனக்கு. "அனன்யா.... நான் இங்கே இருக்கேன்"நு கத்த தோன்றுகிறது!!!!!!

அனன்யா

அனன்யா - எனக்கு இந்த பெண்ணை "நாடோடிகள்" பார்த்தபோது பிடித்திருந்தது.. செம Cute.. ஆனால் சமீபத்தில் தொடர்ச்சியாக - விஜய் டி.வியில் "சீடன்", அதற்கு முதல் நாள் "எங்கேயும் எப்போதும்" என்று பார்த்தபோது திடீரென்று அந்த பெண்ணின் தலையில் ஒளிவட்டம் வந்து தேவதை ஆகிவிட்டது போல தோன்றியது. அதுவும் "எங்கேயும் எப்போதும்" படத்தில் இந்த பெண்ணை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. செம குடும்பப்பாங்காக, துறுதுறுவென்று பேசும் கண்களோடு... அனன்யா மலையாளி என்று மட்டும் தெரியும். அதுவரை ஆனஞாவின் பின்புலம் பற்றி அறிந்துக்கொள்ள இல்லாத ஆர்வம் திடீரென்று கரைபுரண்டோடியாது :-)

இணையத்தில் தேடியபோது இந்தப்பெண் பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரின் மகள் என்றும், 1995-ல் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்தது. பின்னர் எஷியாநெட் டி.வியில் ஒரு Reality Show-வில் பங்கு பெற்ற பிறகு பட வாய்ப்புகள் வார ஆரம்பித்ததாம். ஆனால் பத்திரிகையாளர் ஆவதே தனது லட்சியம் என்று கூறி பட வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம். பின்னர் நடித்து பார்க்களாமே என்று 2008-ளில் ஜெயசூர்யாவுடன் "பாஸிட்டிவ்' என்ற படத்தில் அறிமுகமானாராம். மலையாளத்தில் இப்போதெல்லாம் கதாநாயகிகள் தமிழில் வெற்றிபெற்றால் மட்டுமே அங்கும் கவனிக்கப்படுகிறார்கள். "நாடோடிகள்" படத்தின் வெற்றி மலையாளத்தில் அனன்யாவுக்கு புது நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தந்தது. மோகன்லால் மகளாக "ஷிக்கார்" என்ற படத்திலும், குஞ்சாக்கோ போபனுடன் "டாக்டர் லவ்" என்ற படத்திலும் நடித்த அனன்யாவுக்கு அடித்த ஜாக்பாட் என்றால் அது "எங்கேயும் எப்போதும்" தான்.





இந்த படத்துக்கு முதலில் ஒப்பந்தமான விமலும், அமலா பாலும் தங்கள் கதாபாத்திரங்கள் ஜெய் - அஞ்சலி ஜோடியால் இருட்டடிக்கப்படும் என்று சொல்லி விலகிவிட, அவர்களுக்கு பதிலாக தெலுங்கு நடிகர் ஷர்வானந்தும், அனன்யாவும் கொண்டுவரப்பட்டனர். இந்த அழகான படத்துக்கு இவர்களை விட பொருத்தமான நடிகர்கள் கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. This is a blessing in disguise. "எங்கேயும் எப்போதும்" படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது ஷர்வானந்தும் அனன்யாவும் மிக பாந்தமாக உள்ளனர் மற்றும் அவர்களது subtle காதல் கதை மிக அழகாக தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளுக்கு எனக்கு "எங்கேயும் எப்போதும்" மற்றும் அனன்யா ஜுரமும் இருக்கும். I am not complaining :-)

சமீபத்தில் நான் கேட்ட நவீன இலக்கியம் என்னவென்றால் அது இந்த கவிதை தான்.

நம்பவில்லை..
நம்பினேன்..
ஏன் நம்பவில்லை?
எதற்காக நம்பினேன்?
நம்பியதற்கும்.. நம்பாததற்கும்
காரணம் உண்டோ?
உண்டு...
நம்பிக்கை தான் வாழ்க்கை...

ஹி..ஹி... “உன் பேரே தெரியாது..” பாடலின் இடையில் வரும் இந்த கவிதை தான் அனன்யாவின் குரலில் வாசிக்கப்பட்டதால் தலைசிறந்த நவீன இலக்கியமாக மாறியது.

அஞ்சலி

அஞ்சலி - இளைய தலைமுறை நடிகைகளில் நடிப்பு ராட்சசி. "கற்றது தமிழ்" நான் பார்க்கவில்லை. அதனால் இந்த பெண்ணை பற்றி அப்போது தெரியவில்லை. பின்னர் மற்ற B-கிரேடு படங்களின் ஸ்டில்களில் இந்த பெண்ணை பார்த்தபோது "ஏதோ ஒரு பீஸு" என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் "அங்காடித் தெரு" பார்த்தபோது அந்தப்பெண்ணின் நடிப்பும், முகபாவங்களும் அப்படியே செவிலில் பளீரென்று அறைந்தது போல இருந்தது. இந்தப்பெண்ணின் முகபாவங்கள் என்ன மின்னலா? நொடிக்கு ஆயிரம் முறை மாறுகிறது என்று ஒரு பிரமிப்பு தான் தோன்றியது. அஞ்சலி மீது ஒரு மரியாதை தோன்றியது. தாய்மொழி தெலுங்கு என்றபோதும் தமிழில் சொந்தக்குரலில் பேசும் லாவகம் என்ன, அடுத்த வீட்டு பெண் போல இருக்கும் இயல்பென்ன என்று பிரமிப்பு அடங்கும் முன்னமே ஒரு பத்திரிகையில் அஞ்சலியின் பேட்டியை படிக்க நேர்ந்தது. தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஆந்திராவில் ராஜமுந்திரிக்கு அருகே உள்ள ஒரு கிராமம் எனவும், சிறிய வயதிலேயே தனக்கு படிப்பின் மீது பெரிய ஆர்வம் இல்லை என்றும் அதனாலேயே சினிமா கனவுகளோடேயே வளர்ந்ததாகவும் சொல்லியிருந்தார். இப்போதும் தனக்கு படப்பிடிப்பு இல்லை என்றால் தனது கிராமத்துக்கு சென்றுவிடுவதாகவும், அவருடைய காரியதரிசி ஏதாவது பட வாய்ப்புகள் வந்தால் சொன்னபிறகு சென்னைக்கு வருவேன் என்று சொல்லியிருந்தார். "நான் நடிக்க வந்ததே விபத்து தான்.. நடிக்க வரவில்லை என்றால் IAS ஆகி இருப்பேன் என்று கலர் கலராக ரீல் விடும் நடிகைகள் நடுவே இந்தப்பெண் இவ்வளவு எளிமையா என்று தோன்றியது. அதற்கு பிறகு அஞ்சலியை கொஞ்சம் ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒருவேளை "அங்காடி தெரு"வுக்கு பிறகு வந்த "ரெட்டை சுழி" ஹிட்டாகி இருந்தால் இந்த பெண்ணின் "Career graph" வேறு தளத்துக்கு போயிருக்குமோ என்னவோ ஆனால் அடுத்து "மகிழ்ச்சி", "மகாராஜா" போன்ற பி-கிரேட் படங்கள் தான் கிடைத்தன. கொஞ்சம் பெரிய பேனரில் வந்த "தூங்காநகரம்" படத்தில் வேலையே இல்லை. "மீ... நோ லைக் அல்வா" என்ற ஒரே ஒரு வசனம் தான் இந்த திறமை வாய்ந்த பெண்ணுக்கு. இப்போது வந்த "எங்கேயும் எப்போதும்" படத்தின் விமர்சனங்களில் ஏகோபித்த ஆதரவு அஞ்சலிக்கு தான் கிடைத்தது. படம் பார்த்த எனக்கும் பளிச்சென முதலில் தெரிந்தது அஞ்சலி... அஞ்சலி... அஞ்சலி மட்டும் தான்.



மணிமேகலையாக வந்து படம் பார்ப்பவர்கள் மனதை அசாதாரணமாக கொள்ளைகொண்டது மட்டுமல்ல, இது போன்ற ஒரு பெண் காதலியாக கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என தோன்றியது. அந்த அளவுக்கு வாழ்க்கை மீது ஒரு திடமான அபிப்பிராயம் கொண்ட, தெளிவான பார்வை கொண்ட துணிச்சலான பெண்ணை யாருக்கு தான் பிடிக்காது? படத்தை தயாரித்த ஏ.ஆர் முருகதாஸ் இந்த கதாபாத்திரத்துக்கு அஞ்சலி தான் பொருத்தமாக இருப்பார் என்று பரிந்துரைத்தாராம். அவரது நம்பிக்கையை அஞ்சலி பலமடங்கு மேம்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இந்த பெண்ணுக்கு சவால் விடும் கதாபாத்திரங்களை எழுத இப்போது இயக்குனர்கள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதனால் இந்த பெண் முன்னணி நடிகையாக வருவதற்கு வாய்ப்புகள் கம்மி தான் ஆனால் இந்த பெண் மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் போல, ஹிந்தியில் வித்யா பாலன் போல (பெரிய கதாநாயகர்கள் துணை இல்லாமல்) தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார் என்றால் நான் எனது வெற்றி போல சந்தோஷப்படுவேன். திறமை இருப்பவர்கள் ஜெயித்தே ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவன் நான். “எங்கேயும் எப்போதும்” படத்தில் கொஞ்சம் போல உடம்பு வைத்துவிட்டதை அம்மணி கட்டுக்குள் வைப்பது அவருக்கும் நல்லது, பார்க்கும் ரசிகர்களுக்கும் நல்லது. :-)

அஞ்சலியும், அனன்யாவும் இனிமேலும் நல்ல படங்களில் நடித்து மேலும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்தனைகள்.