{mosimage}
கடவுளே... என் பிரார்த்தனையை கேட்டதற்கு நன்றி.. கொஞ்ச நாள் முன்பு தான் "எங்கே அந்த தேவதை?" என்று புலம்பிக்கொண்டிருந்தேன். இப்போது என் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு அற்புதமான பெண்ணை திரையுலகத்திற்கு கொடுத்து உள்ளாயே! உன் கருணையை எப்படி புகழ்வேன்? அன் மனசை கலைத்த அந்த கேரளத்து பெண் குட்டி நடித்த முதல் படம் இன்னும் ரிலீஸாகவில்லை, ஆனால் அதற்குள் அந்த பெண்ணுக்கு இணையத்தில் அப்படி ஒரூ ரசிகர் கூட்டம். புகழ் பெற்ற மலையாள இயக்குநர் லால் ஜோஸ் இயக்கி விஷுவுக்கு வெளியாக இருக்கும் "முல்லா" என்ற படத்தில் திலீப்புக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் 'மீரா நந்தன்'. களையான முகத்தை கண்டால் நம்ம ஆட்கள் விடுவார்களா? பூபதி பாண்டியன் தன் "நானும் சந்தியாவும்" என்ற படத்துக்கு புக் பண்ணிவிட்டாராம். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்... இந்த பெண் நிச்சயம் அடுத்த மீரா ஜாஸ்மினாக பட்டையை கிளப்ப போகிறாள்.
அஸின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உதித்த கேரள நல்லுலகில் இருந்து அடுத்த பட்டாளம் கிளம்ப தயாராகிக்கொண்டு இருக்கிறது. "பூ" பார்வதி, "எல்லாம் அவன் செயல்" பாமா, "ராமன் தேடிய சீதை" ரம்யா நம்பீஷன் என அடுத்த சில மாதங்களில் கேரள புயல் கோலிவுட்டில் சுழற்றி சுழற்றி அடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதில் ரம்யா நம்பீஷன் எனக்கு ஏற்கனவே கைரளி டி.வி-யின் ‘ஹலோ குட் ஈவினிங்க்' நிகழ்ச்சி மூலம் அறிமுகம். பாமா லோகிததாஸால் ‘அடுத்த மீரா ஜாஸ்மின்' என்ற அடைமொழியுடன் களமிறக்கப்பட்டவர். பார்வதியை பற்றி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே மலையாளம், கன்னடம் என்று சிறகடித்துவிட்ட பட்டாம்பூச்சி. அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்றால் - அனைவரும் டி.வி தொகுப்பாளினிகளாக இருந்து நடிகைகளானவர்கள். எனவே நம் இயக்குனர்களும் இனிமேல் ‘ஏஷியாநெட், கைரளி, சூர்யா, கிரண், ஜீவன்' என தினமும் பார்ப்பது நல்லது. இதோ சாம்பிளுக்கு சில காட்சிகள்.
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}
{mosimage}