One thing leads to another... and we end up experiencing new pleasures.. சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் முன்னுரையில் அதன் நாயகி நிதியை 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டு இருப்பார். எனவே கோவையில் புத்தகம் வாங்க போனபோது 'பிரிவோம் சந்திப்போம்'-இன் இரண்டு பாகங்களையும் வாங்கினேன். சுஜாதாவிடம் இருந்து ஒரு hard hitting stark நாவலை எதிபார்த்த எனக்கு இனிய அதிர்ச்சி. 24 வயதில் வரும் முதல் காதலை அதன் அப்பாவித்தனம் குறையாமல், பிரமிப்பு நீங்காமல், மிக அழகாக, தெளிந்த நீரோடையின் நடையை போல சலசலத்திருக்கிறார்.
Page 1
இந்த முறை கதை நடப்பது திருநெல்வேலி பாபனாசத்தில், குறிப்பாக ஒரு அணைக்கட்டு பின்புலத்தில். அதில் வேலை பார்க்கும் குடும்பத்தினர்களில் இருப்பவர்கள் இதன் கதாபாத்திரங்கள். சுஜாதாவின் வர்ணனைகள் நம் கண் முன் திரைவிரித்து அதில் ஓர் அழகான உலகத்தை திரையிடுகிறது. நான் உருவகபடுத்திக்கொண்ட இடங்கள் - நான் பார்த்த, மிகவும் ரசித்த தொடுபுழா ரப்பர் தோட்டங்களும், அருவிகளும், மலம்புழாவின் அணைக்கட்டு பகுதிகளும். மேலும் கதாபாத்திரங்களுக்கு என் தேர்வு - ரகுவாக இளம் வயது வினீத், மதுமிதாவாக 'நிவேத்யம்' பாமா, கோவிந்தராஜுவாக 'ராகவன்', மற்றும் கோபிநாத்-ஆக 'மூன்று முடிச்சு' நடராஜன், அவர் மனைவியாக 'ஃபாத்திமா பாபு', ஜெயந்தியாக 'மலைசாரல்' சீமா.கதை ரகுபதியின் பார்வையில் நகர்கிறது. எனவே ஒரு moon struck இளைஞனை இயல்பாக சித்தரித்திருக்கிறார். கதையில் மிகப்பெரும் திருப்பம் என dramatic-ஆக எதுவும் இல்லை. Infact நாம் பிற்பகுதியில் ஏதேனும் துரதிர்ஷ்டம் நடக்கும் என தயாராகிவிடுகிறோம் ஆனால் அது என்னவாக இருக்கும் என்பது சஸ்பென்ஸ். அதுவரை முதல் முக்கால்வாசி நாவலுக்கு திகட்ட திகட்ட காதல். நடுவில் ஒரு வரி வருகிறது 'என்ன இது.. வில்லனே இல்லாத காதல்' என்று... Too good to be true. இது நம் மனதை மாட்டியிழுக்க சுண்டப்பட்ட தூண்டில் என்று அறியாமல் நாமும் அந்த காதல் நதியில் ஒரு விதமான voyeuristic pleasure - உடன் திளைக்கிறோம். காதலில் வேலை நிமித்தம் வரும் பிரிவை இன்ப வேதனைகளை சுவாரசியமாக எழுதியிருக்கிறார் சுஜாதா.
சுஜாதா எதிர்பார்த்தது போல இரை சரியாக தூண்டிலில் சிக்குகிறது. அதாவது நாம் ரகுவோடு சேர்ந்து ஒரு roller coaster ride-க்கு தயாராகிறோம். குறிப்பாக மூன்றாவது பாகத்தில் (130வது பக்கத்தில்) இருந்து நம் மனதில் வாழைப்பழத்தில் ஊசி போல மெதுவாக வலியை ஏற்றுகிறார். பகலென்றால் இரவு வரும் என்ற நியதிப்படி, சொட்ட சொட்ட காதல் மழையில் நனைந்த நாம், கண்ணீரையும் வடிக்கும் நிலைக்கு போகிறோம். ரகுவின் கல்யாணம் நிற்கும் அந்த சூழலை ஒரு வித அசாதாரண pressure-ஐ உருவாக்கி நம்மை tension-இன் உச்சத்துக்கே கொண்டுபோகிறார். திரை வடிவம் போல குளோசப் காட்சிகள், பின்னணி இசை எதுவும் இல்லாமல், தன் எழுத்துக்களாலேயே அந்த பாதிப்பை நம்முள் இறக்குகிறார்.
Page 2
ஒவ்வொரு முறையும் topical-ஆக எழுதும் சுஜாதா இந்த முறை வெறும் mushy romance-க்கு மாறிவிட்டாரோ என்று தோன்றும்போது, உலகளாவிய பிரச்சினையான காதல் தோல்வியை மிகவும் கவனமாக கையாண்டிருக்கிறார்.Practical approach எனப்படும் நடைமுறைக்கு சாத்தியப்பட்ட ஒரு தீர்வை காதலில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கு வழங்கியிருக்கிறார். காதலுக்காக தன்னை அழித்துக்கொண்ட தேவதாஸை கிட்டத்தட்ட தெய்வீக உருவமாக மாற்றிவிட்ட காதலர் சமுதாயத்திற்கு, காதலை தாண்டி ஓர் வாழ்க்கை இருப்பதை நினைவுபடுத்துகிறார். இந்த நாவல் 80-களில் எழுதப்பட்டது என்றாலும், இன்றைக்கும் பொருந்தக்கூடிய வகையில் contemporary-ஆக இருக்கிறது.எல்லோரையும் புறந்தள்ளிவிட்டு புத்தகத்தை மூடிவைத்த பின்பும் நம் மனம் முழுவதிலும் வியாபிக்கிறார் ரகுபதியின் தந்தையாக வரும் கோவிந்தராஜு. தோளுக்கு வளர்ந்த பிள்ளையை தோழனாக நடத்தி, இளமையின் சலனத்தை, சபலத்தை சக நண்பனோடு விவாதிப்பது போல தன் பிள்ளையிடம் பேசும் இந்த பாத்திரத்தை எனக்கு மிக பிடித்திருந்தது. இவர் போல என் தந்தை இல்லையே என்ற சின்ன ஏக்கம் தோன்றி மறைந்தது உண்மையே. சில விஷயங்கள் ஆலோசிக்கப்படுவதை விட அனுபவிக்கப்பட வேண்டியவை. கோவிந்தராஜின் கதாபாத்திரம் அந்த வகையை சேர்ந்தது.
இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் மனதை அள்ளுபவை. வாலிபத்தின் வாயிலில், காதலில் விழுந்து ஒவ்வொரு நிகழ்விலும் காதலியை நினைத்து வாழ்க்கையை அனுபவிக்கத்துடிக்கும் ரகுபதி, வெகுளியாய், பொத்தி பொத்தி வளர்க்கபட்ட வளர்ந்த குழந்தையாக, தனக்கென்று ஒரு தனி சிந்தனை இல்லாத மதுமிதா, காதலின் பொருளாதார சுழலில் மாட்டி, வாழாவெட்டியாக மீண்டு, மிச்சமிருக்கும் வாழ்க்கையை தன் குழந்தைக்காக நம்பிக்கையுடன் வாழ்ந்து நம் மனதின் இரக்கங்களை சம்பாதிக்கும் ஜெயந்தி என near perfect பாத்திர படைப்பு.
மொத்தத்தில் காதல் வசப்பட்ட ஒவ்வொருத்தரின், தற்கொலையின் மூலம் சாவின் விளிம்பு வரைக்கும் சென்று வந்த ஆத்மாக்களின் மனவீணையின் நாளங்களை மீட்டி நாதங்களை எழுப்புகிறது இந்த 'பிரிவோம் சந்திப்போம்'. முதல் பாகத்தை மிக அழகாகவும், அர்த்தமாகவும் முடித்து இருக்கிறார்
இதற்கு ஒரு sequel (தொடர்ச்சி) 'பிரிவோம் சந்திப்போம் - 2' என ரகு, மதுவின் வாழ்க்கையில் அமெரிக்காவில் நடக்கும் நிகழ்ச்சிகளை எழுதியிருக்கிறார் சுஜாதா. முதல் பாகம் மூலம் benchmark எனப்படும் தரநிலையை உயர்த்தியிருக்கிறார் சுஜாதா. இதன் அடுத்த பகுதி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த பகுதியை படிக்க ஆரம்பிக்கபோகிறேன்.
பதிப்பகத்தார்: திருமகள் நிலையம், 16 வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017
பக்கம்: 192
விலை: ரூ. 55/-