ராணி பத்மினி (2015)
பொதுவாக படங்கள் எல்லாம் ஒன்று அழுத்தமான திரைக்கதையோடு இருக்கவேண்டும் அல்லது படம் முழுக்க துணுக்குத்தோரணமாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஒரு பார்வையாளராக உங்களுக்கு இல்லையென்றால்.. ஒரு மெல்லிய wafer this storyline-ஐ எளிய காட்சிகளோடு, compelling visuals உடன் சொல்லப்பட்டால் அதை ரசிப்பவராக இருந்தால் இந்த படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். அதிலும் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் என்ற நடிப்பு ராட்சஸிகள் படத்தை தங்கள் தோள்களில் சுமப்பதாக இருந்தால்.. பார்ப்பவர்களுக்கு நிச்சயம் பரவசம் தான்.