Sujathaகொஞ்ச நாளாக புதிதாக எதுவும் படிக்கவில்லை. புத்தகம் எதுவும் கொண்டுவரவில்லை, ஏனோ எனது Amazon Kindle-ஐயும் கொண்டுவரவில்லை. என்றோ சுஜாதாவின் சிறுகதைகளை 4Shared வலைதளத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவற்றை பதிவிறக்கம் செய்து வைத்தேன். இருப்பினும் படிக்க நேரமே கிடைக்கவில்லை. ஊருக்கு கிளம்பும் excitement-ல் காலை 4:30 மணிக்கே எழுந்துவிட்டபோதும், விமானத்தில் தூக்கம் வராமல் ஒரே அசதி. திரையில் ஒன்றும் உருப்படியான படங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தபோது சுஜாதாவின் சில கதைகளை பதிவிறக்கம் செய்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. படித்துவிட்டு சுடச்சுட எழுதிய குறுவிமர்சனங்கள். இப்போது வானத்தில் பறக்கும்போது பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். இது இரண்டாவது முறை.

Kanthaloor Vasanthakumaran Kathaiநான் படித்த சுஜாதா எழுதிய முதல் வரலாற்று புதினம் இது. தலைவர் மொத்தமே இரண்டு வரலாற்று நாவல்கள் தான் எழுதியிருக்கிறார் போல. இந்த நாவலை பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எனக்கு இந்த நாவலை பற்றிய ஓரளவுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. அது பூர்த்தி அடைந்ததா என்று கேட்டால் பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். பொன்னியின் செல்வன் முடிந்த சில காலங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இதில் வருகின்றன. அதனால் நாம் பொன்னியின் செல்வனில் பார்த்த ராஜராஜ சோழனுக்கும், இதில் வரும் ராஜராஜ சோழனுக்கும் நிறைய வித்தியாசங்கள். மேலும் இதிலும் ராஜராஜ சோழன் கதாநாயகன் இல்லை. மாறாக பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல இதிலும் ஒரு ‘வ’ தான் கதாநாயகன் - வசந்தகுமாரன்.

Madhyamarமறைந்த எழுத்துலக ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா அவர்கள் தமிழ் நடுத்தர வர்கத்தினரை அடிப்படையாக கொண்டு எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த ’மத்யமர்’. இது 1990-ல் கல்கியில் தொடராக எழுதப்பட்டாலும், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கப்புறமும் பெரிய மாற்றமில்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு பொருத்தமாகவே உள்ளது. மேலேயும் பணக்காரர்கள் வாழ்க்கைக்கும் போக முடியாமல், கீழே ஏழைகளின் வாழ்க்கைக்கும் இறங்கமுடியாமல் இரண்டாங்கெட்டானாக தவிக்கும் இந்த ‘மத்திய’ வர்க்கத்தை பின்புலமாக சோகம், துரோகம், தைரியம் என பலதரப்பட்ட ‘ரச’ங்களை கொண்டு எழுதப்பட்ட இந்த கதைகளை மேலும் சுவாரசியப்படுத்துகிறது ஒவ்வொரு கதைக்கப்புறம் பிரசுரிக்கப்பட்ட வாசகர்களின் கருத்து கடிதங்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை எடுக்கவே இவ்வளவு நாட்கள் பிடித்துள்ளது எனக்கு. 12 கதைகளையும், அதன் feedback-ஐயும் படிக்கும்போது கதைக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்தது போன்ற உணர்வு.

இதற்கு பெயரும் கொலைசமீபத்தில் அடுத்தடுத்து படித்த சுஜாதாவின் நாவல் இது. வழக்கம் போல சுஜாதா ஒரு கொலைக்களத்தை எடுத்து விறுவிறுப்பாக கையாண்டிருக்கிறார். வழக்கம் போல கணேஷும், வசந்தும் வருகிறார்கள் என்ற போதும் இம்முறை பாத்திரப்படைப்பில் கொஞ்சம் வித்தியாசம். உதாரணம் - வசந்த் அடிக்கடி பேசும் தே*** பையா மற்றும் இதர கெட்ட வார்த்தைகள். கணேஷ் இதில் இன்ஸ்பெக்டர் இன்பானந்தியை காதலிக்கிறான். வேறு எந்த நாவலிலாவது கணேஷ் கல்யாணம் ஆனதாக வந்ததா என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லவும். மற்றபடி வழக்கில் இறங்கியதும் துப்பறியும் அந்த வேகம் வழக்கமான துறுதுறுப்பு.

ஆதலினால் காதல் செய்வீர்மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இந்த படைப்பை சமீபத்தில் சென்னை ரயில் நிலைய ஹிக்கின்போத்தம்ஸில் பிடித்தேன். நாவலை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - Simply hilarious!!! ஆரம்பத்திலேயே கதையை யூகிக்க முடிந்தாலும், அடுத்த 142 பக்கங்களில் நம்மை கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். Diametrically opposite-ஆக - காதல் அவசியமில்லை என்ற ஆரிஸ், காதலிக்கவே பிறந்த ஜோமோ, விற்பனை பிரதிநிதியான கிட்டு / கிட்டா, கல்யாணம் ஆனபின்பும் மனையுடன் கடிதத்தில் காதலிக்கும் பார்ஸ்ஸாரதி மாமா என நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் - அபிலாஷா, அபிராமி, ஷாலினி, கஸ்தூரி மற்றும் நீலா ஆகிய பெண்கள் என செம ரகளை. இந்த நாவலை யாரும் இன்னும் சினிமாவாக எடுக்க முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.

Click the image to read furtherமறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் புகழ் பெற்ற விஞ்ஞான நாவல்களில் ஒன்று "என் இனிய இயந்திரா" மற்றும் அதன் தொடர்ச்சியான "மீண்டும் ஜீனோ"வும். இதில் "என் இனிய இயந்திரா" முதலில் எனக்கு தொலைக்காட்சி தொடராக தன் அறிமுகம் ஆனது. அப்போது பதினொன்றாவது படித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்திலேயே எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது. எனினும் அதை புத்தகமாக கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் தான் வாங்கினேன். அதை விட கொடுமை வாங்கியதை படிக்க ஒரு வருடம் பிடித்தது. முதலில் “என் இனிய இயந்திரா” படித்ததும் அதன் தொடர்ச்சியான “மீண்டும் ஜீனோ”வையும் தேடிப்பிடித்து படித்த பிறகே இது குறித்த எனது பதிவை போடவேண்டும் என்று பொறுத்து இந்த வாரம் “மீ. ஜீனோ” படித்த பிறகு பதிவு இதோ.

சுஜாதாஅமரர் சுஜாதா எழுதிய இந்த புத்தகம் வாங்கி சரியாக 1 வருடம் 1 வாரம் கழித்து தான் படித்து முடிக்க நேர்ந்தது. கடந்த வருடம் அனன்யா அக்கா சென்னை வந்தபோது புத்தக கடைக்கு அழைத்து சென்றபோது அவருடைய பரிந்துரையில் பொறுக்கிய புத்தகம் இது. சுஜாதாவின் மூன்று குறுநாவல்களின் தொகுப்பு இது - (1) மேற்கே ஒரு குற்றம், (2) மீண்டும் ஒரு குற்றம் (3) மேலும் ஒரு குற்றம். வாங்கும்போதே அக்கா இதில் மூன்றாவது கதை அற்புதமாக இருக்கும், படித்துவிட்டு சொல் என்று சொன்னார். அதனால் இதை படிக்க ஆரம்பித்தபோது 3-1-2 என்ற வரிசையில் படித்தேன். தொடர்ந்து கணேஷ்-வசந்தை படித்த பாதிப்போ என்னவோ கடைசி (2) கதையை படிக்கும்போது ஆரம்பத்திலேயே முக்கிய முடிச்சை கண்டுபிடித்துவிட்டேன். என்னவோடா மகேஷ்வரா!!

SujathaIt is a long due... இந்த புத்தகத்தை படித்து ரொம்ப நாள் ஆனாலும் ஏனோ என் கருத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக சுஜாதாவின் புத்தகங்கள் படித்து முடிக்கும்போது ஒரு வித பிரமிப்போடும், கதைகளத்தை பற்றிய புதிய ஞானத்தோடும் முடிப்பது வழக்கம். மாறாக இந்த மூன்று குறுநாவல்கள் (ரோஜா, ஜோதி, 6991) கொண்ட புத்தகத்தை படித்துமுடித்தபோடு ஒருவித சோக உணர்ச்சி நம் மனதை பிசைவதாக உணரமுடிகிறது. Quite unusual of Sujatha. (i)”ரோஜா” - துஷ்டனான ஒரு தொழிற்சங்க தலைவன் துரையால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோகும் இளம்பெண் லட்சுமியின் கொலையை துப்புதுலக்க வரும் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு துப்பு கொடுப்பது ஒரு உதிர்ந்த ரோஜா மலர். ஏற்கனவே கற்பழிப்புகளை படித்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் என்னை இந்த நாவல் பாதித்ததில் ஆச்சரியமில்லை. குறிப்பாக லட்சுமியின் குருட்டு தாத்தா அவளுடைய கல்யாணத்துக்கால சேர்த்து வைத்த காசு உண்டியலை சிதறடித்து போலீஸிடம் பேசும் காட்சி. கதை தான் இப்படி என்றால் முடிவு இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது. (ii) ’6991’ - சிறிய வயதிலிருந்து அழகாக இருக்கும் ஒரே குற்றத்துக்காக பல முறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் விமலாவின் மனப்போராட்டத்தை, பயணத்தை அவளுடைய பார்வையிலேயே, அதிக melodrama இல்லாமல் கொஞ்சம் sophisticated urban style-ல் சொல்லியிருக்கிறார். இதில் சுஜாதா ஓரளவுக்கு நம் மனதை தொடவும் செய்கிறார். (iii) ஜோதி - இந்த கதையை பற்றி அதிகம் நினைவில்லை. அதனால் pass. (புத்தக விவரம்: விசா பதிப்பகம், 120 பக்கங்கள், விலை: ரூ. 60/-) - {oshits} வாசகர்கள்!!!

ஐந்தாவது அத்தியாயம்சமீபத்தில் படித்த சுஜாதாவின் (சற்று பெரிய) சிறுகதை தொகுப்புகளில் ஒன்று - “ஐந்தாவது அத்தியாயம்”. இதில் “ஐந்தாவது அத்தியாயம்” மற்றும் “ஓரிரவில் ஒரு ரயிலில்” என இரு கதைகள் இருந்தன. இதில் என்னை கவர்ந்தது “ஓரிரவில் ஒரு ரயிலில்”. சக்திவாய்ந்த இந்து தலைவரான சுவாமி ராஜ் பண்டிதருக்கு பாதுகாப்பாக வரும் அஷோக்குக்கு சுவாமிஜி அருள்வாக்கு சொல்கிறார் - அவனுடைய வருங்கால மனைவி, இரண்டாவது எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டு, அதே ரயிலில் வருகிறாள் என்று. ஆச்சரியமாக அஷோக்கின் நண்பனுடைய தங்கையான பிருந்தாவும் அதே ரயிலில் வர... அந்த ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கும் குறுநாவல் - ”ஓரிரவில்..”. அடுத்த கதையான “ஐந்தாவது அத்தியாயம்” கணேஷ் - வசந்த் தோன்றும் ஒரு கொலை த்ரில்லர். தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒரு தொடர்கதையில் வருவதாகவும், அதில் ஐந்தாவது அத்தியாயத்தில் தான் கொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கும் ஆபத்து வரும் என்று அபூர்வா வக்கீல்களான கணேஷ் - வசந்தை அணுக.. குறித்த தினத்தில் கொலையும் நடந்துவொடுகிறது. (எனக்கு) கொஞ்சம் குழப்பமாக கதையாக முடிகிறது. மேலும் இதில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. உங்களில் யாரேனும் இந்த “ஐந்தாவது அத்தியாய”த்தை படித்திருந்தீர்கள் என்றால் கொலைகாரர் யாரென்று பின்னூட்டமிடவும்... ப்ளீஸ்!!! {oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு

விரும்பி சொன்ன பொய்கள்சுஜாதாவின் இந்த 1987-ல் ’குங்குமச் சிமிழ்’ இதழுக்காக எழுதப்பட்ட நாவல், ஒரு புதுமையான முயற்சி. நாவலின் கடைசியில் வரும் ஒரே வார்த்தையில் மொத்த நாவலின் course-உம் மாறிப்போகக்கூடிய சாத்தியம் உண்டு. The best part is - அந்த வார்த்தையை படிக்கும் வாசகர்களான நாம் முடிவு செய்துக்கொள்ளவேண்டும். கதையை பற்றி சொல்லவேண்டும் என்றால் இது ஒரு adult love story with a strong undercurrent of eroticism. கோபத்திலும், காமத்திலும் எப்போது obsession எனப்படும் ஒரு வெறித்தனமான நிலையில் இருக்கும் ராதாகிருஷ்ணனின் கடந்த காலத்தை அறிந்தும் அவனுக்கு வேலை கொடுக்குகும் புருஷோத்தமன், தன் இளம் மனைவி மந்தாகினிக்கு மதுரையை சுற்றிக்காட்டும் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கிறார். கொஞ்சம் abnormal-ஆக நடந்துக்கொள்ளும் மந்தாகினியுடன் மரக்குடியில் சலனமான இரவில் கடற்கரை வெளியில் passionate உடலுறவு ஏற்படுகிறது. இப்போது ராதாகிருஷ்ணனுக்கு மந்தாகினி பைத்தியம் பிடித்துவிட அவளை தொடர்ந்து சென்னைக்கு வந்த இடத்தில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது. இந்த 80 பக்கக்கதையில் 78 பக்கங்கள் வரை ஒரு கண்மூடித்தனமாக காமம் / காதலில் விழுந்த மனிதனின் உளவியல்ரீதியான பயணமாக போய்விட்டு கடைசி 2 பக்கங்களில் சடாரென்று கியர் மாற்றி வேறு தளத்தில் முடிகிறது. ஆரம்பம் கொஞ்சம் மந்தமாக ஆரம்பித்தாலும் கதை சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன் (உபயம்: மந்தாகினியின் உடற்கூறு பற்றிய சுஜாதாவின் வர்ணனை மற்றும் ராதாகிருஷ்ணனுடனான உடலுறவு) கதையில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்வதை உணரமுடிகிறது. சுஜாதாவின் பலமே இந்த பளீரென்று முகத்தில் அடிக்கும்படியான எழுத்துக்கள் தான். நிச்சயம் இதை நான் (வயதுக்கு வராத) சிறுவர்களுக்கு படிக்க கொடுக்கமாட்டேன். ஆனால் பெரியவர்கள் இந்த கதைப்போக்கை உணர்ந்து பாராட்ட முடியும். இந்த புத்தகம் ஏற்கனவே என்னோடு இருந்தபோதும் இது குறித்த அனன்யாவின் பதிவை படித்தபிறகே ஒரு குறுகுறுப்பு வந்து ஒரே மூச்சில் படித்தேன், ரசித்தேன். புத்தக விவரங்கள்:- விசா பதிப்பாளர்கள், சென்னை; 80 பக்கங்கள்; விலை: ரூ. 38/- .

Aaaa....சுஜாதா எழுதிய இந்த ‘ஆ’ நாவல் இதனை படிப்பவர்களை நிச்சயம் ‘ஆ’ என்று வாயை பிளக்க வைக்கும்.. கொட்டாவி விடுவதற்கு அல்ல... பிரமிப்பில்... பயத்தில்.... ஆச்சரியத்தில்... 1992-இல் குமுதத்தில் தொடராக எழுதப்பட்ட இந்த கதை முற்பிறவி / Split personality / பேய் என்று பல விஷயங்களை உள்ளடக்கியது. இது பேய்க்கதையா இல்லை விஞ்ஞானபூர்வமான கதையை என்று படித்து முடித்த பின்பு தான் நமக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் படிக்கும்போது ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வாக்கியத்திலும், ஒவ்வொரு எழுத்திலும் போதை போல / விஷத்தை போல விறுவிறு என்று நம் மண்டைக்குள்ளே பரபரப்பு ஏறுவதை உணரலாம். முடிவில் இது அறிவியல் ரீதியாக அலசப்படுவதும் சுவாரசியமாக தான் இருக்கிறது. இது தொடர்கதையாக வந்த காலத்தில் படித்த பல வாசகர்கள் தங்களுக்கும் அது போன்ற அமானுஷ்ய குரல்கள் கேட்பதாக சுஜாதாவுக்கு எழுதினார்களாம். அதற்கு சுஜாதா ஒரு கற்பனை கதையை நம்பும்படியாக எழுதுவதால் வரும் பின்விளைவுகள் என்று பதிலளித்திருக்கிறார்.

Nylon Kayiruஇது எழுத்தாளர் சுஜாதாவின் முதல் நாவலாம். 1968-இல் குமுதத்தில் 14 வார தொடராக வந்திருந்ததாம். நிச்சயம் அந்த காலகட்டத்திய வாசகர்களுக்கு முற்றிலும் புதிய எழுத்து நடையாக, புத்தம் புது படிக்கும் அனுபவமாக இருந்திருக்கும். நீண்ட வாக்கியங்கள் இல்லை, சுற்றி சுற்றி பேசப்பட்ட பெரிய வசனங்கள் இல்லை. மாறாக நறுக்கு தெரித்தாற்போல straight to matter - சிறிய வாக்கியங்கள், விறுவிறுப்பான துப்பறியும் நடவடிக்கைகள், இன்றும் கூட contemporary-ஆக உள்ளது. சுஜாதா தன் முன்னுரையில் இந்த நாவலை தற்போது படிக்கும் போது இன்னும் சில மாற்றங்கள் செய்திருக்கலாம், ஆனால் முதல் முயற்சி என்பதால் அதை மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். பம்பாயில் ஒரு பெண்பித்தனான கிருஷ்ணன் கொலை செய்யப்படுகிறான், அதை பிராசிக்யூஷன் அவசரம் அவசரமாக ஹரிணி, அவள் சகோதரன் தேவ் ஆகியோரால் செய்யப்பட்ட ’சொந்தப் பகையால் பழிவாங்கும் நடவடிக்கை’ என்று முடிக்க முயல்கிறது. அதை குற்றம் சாட்டப்பட்ட தேவ்-இன் வக்கீல் கணேஷ் சாமர்த்தியமாக உடைத்துவிட்டுகிறான். இந்த கேசை ஒரு ரிட்டையர் ஆகப்போகும் போலீஸ் சூப்பரிண்டெண்ட் ராமநாதன் தன் கடைசி 15 நாட்களில் கையில் எடுத்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறார். அந்த வழக்கை ராமநாதன் உடைப்பது படு சுவாரசியம். வயது பெண்கள் தங்களை கிருஷ்ணன் போன்ற பெண்பித்தர்களிடம் எப்படி இழக்கிறார்கள், அதை தொடரும் சட்டவிரோதமான கருக்கலைப்பின் ஆபத்துகளும் இந்த நாவலின் பாடங்கள். கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் துப்பறியும் படம் பார்ப்பது போல விறுவிறுப்பு. இந்த புத்தகம் அவருடைய பயணத்துக்கு ஒரு நல்ல தொடக்கம். இன்று கூட ரசிக்கும் அளவுக்கு காலத்தை தாண்டி நிற்கிறது.

புத்தக விவரம்:-
பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், சென்னை.
பக்கங்கள்: 144 பக்கங்கள்
விலை: ரூ. 41/-