Tamil
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

3

இந்த படப்பாடல்கள் வந்து காலங்கள் ஆகிவிட்டன, படமும் வந்து பெட்டிக்குள் சுருண்டு போய் மாதங்கள் ஆகிறது, இப்போது இதற்கு போய் இசை விமர்ச்னம் எழுதுகிறேன் என்றால் நான் இத்தனை காலமாக கோமா-வில் இருந்திருக்கவேண்டும் என்று நீங்கள் நக்கலாக சிரிப்பது எனக்கு இந்தப்பக்கம் தெரிகிறது. என்ன செய்வது? கடந்த வாரம் சுரேஷ் ரூமில் கேபிள் டி.வி-யில் இந்த படம் போட்டபோது, நான் என்னவோ படித்துக்கொண்டே இதன் ஒலிச்சித்திரம் கேட்டபோது தான் இதன் இசையை கேட்டேன். அற்புதமான பின்னணி இசை என் கவனத்தை கவர, (அரைக்கண்ணால் படத்தை பார்த்துக்கொண்டு இருந்ததில் பாதி படம் வரை பிடித்திருந்தது வேறு விஷயம்) அதை தொடர்ந்து பதிவிறக்கம் செய்து கேட்டபோது “அடடா! அழகான இந்த ஆல்பத்தை மிஸ் செய்ய இருந்தோமே” என்று தோன்றியது. ஒரு வாரம் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்தபோது, இதன் ஹிந்தி பதிப்பையும் கேட்டேன். 3 (ஹிந்தி) ஓரளவுக்கு தமிழ் மூலத்தின் essence-ஐ தக்கவைத்திருந்தது. இதை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றி எழுதியது தான் இந்த பதிவு.

எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிசை என்று பார்த்தால் - 1. போ நீ போ, 2. கண்ணழகா, 3. நீ பார்த்த விழிகள், 4. இதழின் ஓரம், 5. Why this கொலவெறி, 6. போ நீ போ Remix மற்றும் இதன் Theme music bits.

1. போ நீ போ:- இந்தி பாடகர் மோஹித் சௌஹானின் குரலில் வெளிப்படும் வலி தான் இந்த பாடலின் ஹைலைட். தமிழை மென்று கொல்லாமல் ஓரளவுக்கு சுத்தமான உச்சரிப்பும் கேட்பவர்களுக்கு இந்த பாடலை பிடிக்க வைக்கிறது. படத்தில் காட்சியோடு பார்த்தபோது ஏனோ இந்த பாடலில் ஈர்ப்பு அதிகமாகிவிட்டது போன்ற தோற்றம். குறிப்பாக தனுஷின் மாலைக்கருக்கலில், அய்யப்ப சாமி கறுப்பு உடையில் வெட்டவெளியில் வெறித்து பார்க்கும் தனுஷின் tight close-up செம haunting. ஹிந்தியில் இதை ’அதனான் சமி’ பாடியிருந்தார்.

2. கண்ணழகா:- அழகாக ஆரம்பிக்கும் ஒற்றை வயலில் நாதமும், ஷ்ருதி ஹாசனின் unconventional குரலும் இந்த பாடலுக்கு ஒரு புது பரிணாமத்தை கொடுத்திருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த பாடலில் என் கவனத்தை ஈர்த்தது இதன் மிக எளிய பாடல் வரிகள். தம்பதியினரின் நெருக்கத்தை சொல்ல கடின எழுத்துநடை அவசியமில்லை என்று அழகாக நிரூபித்திருக்கிறது இந்த பாடல். பாடலாசிரியர் பெயர் தேடியபோது “தனுஷ்” என்று போட்டிருந்தது. அது உண்மை என்னும் பட்சத்தில் warm wishes to him - தனுஷே எழுதி, பாடியிருக்கும் இந்த பாடல் நிச்சயம் ஒரு பாராட்டப்படவேண்டிய முயற்சியே.

3. நீ பார்த்த விழிகள்:- விஜய் யேசுதாஸ் மற்றும் ஸ்வேதா மோகன் (பாடகி சுஜாதாவின் மகள்) பாடியுள்ள இந்த பாடலில் தூக்கலாக இருப்பது மெலடி தான். இதன் இசைக்கோர்வை ஏனோ இளையராஜாவின் நடையை நினைவுபடுத்தியது. இந்தியில் பிரபல கஜல் பாடகரான ரூப்குமார் ராத்தோர் இந்த பாடலை பாடியுள்ளார்.

4. இதழின் ஓரம்:- இந்த பாடல் பிடிபடவே கொஞ்ச நாட்கள் பிடித்தது. இதிலும் பாடல் வரிகள் தான் என் கவனத்தை முதலில் ஈர்த்தது. - “நீ தானே குறிஞ்சிப்பூ, நீ சொல்லு ஐ லவ் யூ” என்று கேட்டதும் கொஞ்சம் சிரிப்பாக வந்தது. கேட்க கேட்க இந்த பாடலின் orchestration-ல் இருந்த துள்ளல் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது.

5. Why this கொலவெறி? - உலகத்துக்கே பிடித்திருந்த பாடல், எனக்கும் பிடிக்காதா என்ன?

Anirudh-Ravichanderஇதன் இசையமைப்பாளர் அநிருத் ரவிச்சந்தர் 3 படத்தின் தயாரிப்பாளர் / இயக்குநர் ஐஷ்வர்யா தனுஷின் உறவினர் என்பதால் ”எளிதாக கிடைத்திருக்கும் வாய்ப்பு” என்று இதன் பாடல்களை ஆரம்பத்தில் நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘கொலவெறி’ கூட fluke hit என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த ஆல்பத்தை முழுவதுமாக கேட்ட பிறகு “இந்த பையனுக்குள்ளேயும் ஏதோ திறமையிருக்கு போல” என்று தோன்றியது. குறிப்பாக பின்னணி இசையில் - இளையராஜாவுக்கு பிறகு ரீரெகார்டிங்கில் தமிழில் சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் இல்லை (ஏ.ஆர் ரகுமான் கூட). அமராவதி என்ற படத்தில் அறிமுகமான பாலபாரதி அதில் பின்னணி இசையில் வயலினில் கலக்கியிருப்பார். ஆனாலும் அவருக்கு அடுத்த வாய்ப்புகள் வரவில்லை. அதற்கப்புறம் முதல் படத்திலேயே பின்னணியில் என்னை impress செய்தது “3” அநிருத் தான். அடுத்த படங்கள் தான் இவருக்கு acit test.