Malayalam
Typography

Melvilasomரொம்ப நாட்களாக பார்க்கவேண்டும் என்று wish list-ல் இருந்த இரண்டு படங்கள் சமீபத்தில் Youtube-லிருந்து பதிவிறக்கத்துக்கு கிடைத்தது. விடுவோமா? நெடுநாளைய ஆசையை தீர்த்துக்கொண்டாயிற்று. அந்த படங்கள் - சமய் (ஹி. 2003) மற்றும் மேல்விலாசம் (மலை. 2010). இரண்டுமே தத்தம் காலத்தில் பரிட்சார்த்த முயற்சி என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை. தேவையற்ற வணிகரீதியான சமாச்சாரங்களை தவிர்த்துவிட்டு தேவையான அளவுக்கு பட நீளம் கொண்டவை.

SamaySamay - when time strikes (2003):- அந்த சமயத்திலேயே கதாநாயகன் இல்லாமல் பெண் எஸ். ஐயை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. ACP மாளவிகா சௌஹான் மும்பையின் ஒரு கடமை மிக்க காவல்துறை அதிகாரி. 10 நாட்களுக்குள் மூன்று கொலைகள் நடக்க, அவை நடந்த விதத்தை பார்க்கும்போது மாளவிகா அவற்றை நிகழ்த்துவது ஒருவரே என்று முடிவு செய்கிறாள். நடந்த கொலைகளை கூர்ந்து கவனிக்கும்போது சில குறிப்புகள் கிடைக்கிறது. கடைசியில் கொலையாளியை நெருங்கியும் விடுகிறாள். கொலைக்கான காரணம் கொலையாளியின் தாழ்வு மனப்பான்மையே என்று அறிந்து அவனை வென்றுவிட்டதாக படம் முடியும்போது அந்த திருப்பம் மாளவிகாவின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது.

கணவனை இழந்து single mother-ஆக சுஷ்மிதா சென். ACP-ஆக ஒரு அற்புதமான கம்பீரமான உடல் மொழி என மாளவிகாவாகவே வாழ்ந்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக நம் கவனத்தை ஈர்ப்பது உதவியாளராக வரும் சுஷாந்த் சிங். ஒரு துப்பறியும் படத்தில் வருவது போல நம் கவனத்தை திசை திருப்புவதுபோல சில பாத்திரங்கள் அவசியம் இல்லாமல் கேள்விகள் கேட்கிறார்கள். ஒரு item song மட்டும் வேகத்தடை போல வருகிறது. அதைத் தவிர குறை என்று பெரிதாக இல்லை. 2 மணி நேரமே ஓடக்கூடிய இந்த படம் நிச்சயம் உங்களை engage செய்யும்.

மேல்விலாசம்:- கடந்த ஆண்டின் மலையாளத்தில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று என்று ஏகமனதாக சிலாகிக்கப்பட்ட படம் இது. சுரேஷ்கோபி, கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ் நடிகர்களான ’நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ள இந்த படம் இதே பெயர் கொண்ட மேடை நாடகத்தை திரைவடிவமாக கொண்டுவந்திருக்கிறார் மாதவ் ராமதாசன். எனினும் எனக்கு இது “A few good men" என்ற Broadway மற்றும் Tom Hanks நடித்த ஆங்கில படத்தின் ஆழ்ந்த தாக்கம் இருப்பதாக பட்டது எனக்கு.

Melvilasom Poster

”மேல்விலாசம்” ஒரு court martial கதை. ஒரு ஜவானான சவார் ராமசந்திரன் தனது உயரதிகாரிகளான மகேந்திர வர்மா மற்றும் BD கபூர் ஆகியோரை சுட்டுக்கொல்ல முயற்சி செய்ததை விசாரிக்கும் court martial-ல் அவர் சார்பாக கேப்டன் விகாஸ் ராய் வாதாடுகிறார். அந்த விசாரணையில் ராணுவத்தில் கூட இருக்கும் ஜாதிவெறி பிடித்த அதிகாரிகளின் கொடுமை வெளிவருகிறது. கிட்டத்தட்ட 98 நிமிடங்களில் ஒரு சில நிமிடங்கள் தவிர முழு படமும் நம் கவனத்தை இங்கே அங்கே அலைபாயவிடுவதில்லை. அவ்வளவு taut script. எனினும் படம் முடியும் போது நமக்கு ஒருவித ஏமாற்றமே மிஞ்சுகிறது. ராணுவத்தில் seniority-க்கும் rank-க்கும் கொடுக்கப்படும் மரியாதை அந்த அதிகாரிகள் தங்கள் subordinates-ஐ எப்படி நடத்துகிறார்கள் என்பதை கண்டுக்கொள்வதில்லை என்ற கசப்பான உண்மையுடன் ராமச்சந்திரன் தண்டிக்கப்படுவதாக முடிகிறது படம்.

நான் A few good men பார்த்ததில்லை. ஆனால் அதன் frame by frame உருவலான Shaurya என்ற ஹிந்திப் படத்தை பார்த்துள்ளேன். அதில் தன் superior-ஐ கொன்ற ஒரு ஜவானை court martial-க்கு கொண்டுவருவார்கள். அவனால் கொல்லப்பட்ட அதிகாரி போலி என்கவுண்ட்டர் நடத்த முயற்சிக்கும்போது ஆத்திரமடைந்து அந்த வீரன் தன் அதிகாரியை கொன்றிருப்பான். அந்த என்கவுண்டருக்கு ஆணையிட்ட இறந்த வீரனின் உயரதிகாரி தனது மதவெறியை நியாயப்படுத்துவார். கடைசியில் குற்றம் சாட்டப்பட்ட அந்த வீரனை விடுதலை செய்துவிட்டு இந்த உயரதிகாரியை அடுத்த court martial-ல் கொண்டுவந்து நிறுத்துவார்கள்.

ஆனால் ”மேல்விலாச”த்தில் அந்த ஜவான் மேல் கமிஷனை அணுகியிருக்க வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு மனு எழுதியிருந்திருக்கவேண்டும், மாறாக சட்டத்தை தன் கையில் எடுத்தது தவறு என்று சொல்லி மரண தண்டனையும், அவனை அந்த அளவுக்கு தூண்டிய ஜாதிவெறி கொண்ட அதிகாரிக்கு பதவி உயர்வும் கிடைப்பதாக படம் முடிகிறது. அது யதார்த்தமாக இருக்கும் பட்சத்திலும் படம் பார்க்கும்போது ஒருவித ஏமாற்றத்தை கொடுக்கிறது.

சில வரிகளை மட்டுமே பேசும் பார்த்திபனும் சரி, பக்கம் பக்கமாக சுரேஷ் கோபியும் சரி, ஆரம்பத்தில் விகாஸ் ராய் அதிகம் பேசி நேரத்தை கடத்துவதாக எரிச்சல்பட்டு பின்னர் உண்மைகள் வெளிவரும்போது அவருக்கு மதிப்பு தரும் presiding officer-ஆக வரும் தலைவாசல் விஜய், ஜாதி வெறி பிடித்த அதிகாரியாக வரும் கிருஷ்ணகுமார் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். நல்ல படங்களை விரும்பும் ரசிகர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய பட்டியலில் இந்த மேல்விலாசத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

Youtube-லிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய நான் Firefox மற்றும் அதில் DownloadHelper என்ற addon உபயோகிக்கிறேன். http://addons.mozilla.org சென்று DownloadHelper என்று தேடினால் கிடைக்கும் addon-ஐ install செய்துவிட்டு, Youtube-ல் வீடியோ இருக்கும் பக்கத்தை திறந்தால் Title-க்கு அடுத்துள்ள baloon-ஐ சொடுக்கினால் அந்த வீடியோ download-ஆக ஆரம்பித்திருக்கும்.

Youtube DownloadHelper

Related Articles/Posts

மூன்றாம் முறையாக பொன்னியின் செ... கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்த தஞ்சை பயணங்கள், அதுவும் அந்த இடங்களோட...

Recently watched....... {mosimage}Thanks MoserBaer! The world's second largest Optical sto...

Varavelpu (1989)... {mosimage}This Satyan Anthikaud directed Mohanlal-Revathy starrer is a...

32nd Chennai Book Fair... வருடாவருடம் சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை பற்றி அறிந்திரு...

இருமுகன் - அறு(வை)முகன்... தமிழ் சினிமாவில் science thriller-ஐ பார்த்து ரொம்ப நாளாச்சு.. கடைசியா ...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.