Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Lady Auto Driverஇன்னைக்கு கடலூர்ல இருந்து பாண்டிக்கு போக பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பும்போது யதேச்சையாக ஒரு பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தது. நான் கடலூரில் பார்த்த முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண் தான். அந்தப்பெண் ஷேர் ஆட்டோவுக்கு பதிலாக சவாரி ஆட்டோவாக எங்களை அழைத்து சென்றிருந்தாலும் நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்க தயாராக இருந்தோம். எனக்கு அவரை பார்த்ததும் சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியவில்லை. கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் இந்த தொழிலில் ஆணுக்கு நிகராக இந்த பெண்ணும் வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படுவதா இல்லை இப்படிப்பட்ட கஷ்டமான வேலைக்கு வரும் அளவுக்கு பொருளாதாரரீதியான கஷ்டம் அவரை செலுத்தியிருக்கவேண்டும் என்ற ஆதங்கமும் தோன்றியது. எது எப்படியோ, அந்தப்பெண்ணுக்கு வாழ்க்கை வண்டி நல்லபடியாக ஓடவேண்டும் என்று பிரார்த்திக்க தான் தோன்றியது. கடலூரில் இப்போது மூன்று பெண்கள் ஓட்டுகிறார்களாம். இந்தப்பெண் ஐந்து வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறாராம். எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

சில வருடங்களுக்கு முன்பு பாண்டியில் ஒருமுறை ஒரு பெண் ஓட்டிய ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய வேண்டியது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ராஜா தியேட்டர் வரை செல்ல ஷேர் ஆட்டோவை தான் உபயோகப்படுத்தவேண்டும். நான் பஸ்ஸில் இருந்து இறங்கியதும் ஆட்டோ ஸ்டேண்டுக்கு வந்தப்போது இந்தப்பெண் பேட்டரியில் இயங்கும் ஷேர் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். நானும் மற்ற இருவரும் அதில் ஏறிக்கொண்டோம். ஆனால் கொஞ்ச நேரத்துக்குள் மற்றொரு (ஆண்) டிரைவர் வந்து எங்களை இறங்கி அவருடைய ஆட்டோவில் ஏறுமாறு சொன்னார். சவாரியை (எங்களை) விடமாட்டேன் என்று அந்தப்பெண் வாதிட, அதற்குள் அந்த (ஆண்) டிரைவருக்கு துணையாக மேலும் இரண்டு ஓட்டுநர்கள் வந்துவிட, என்னோடு வந்த இரண்டு பேரும் இறங்கி அந்த ஆட்டோவில் ஏறி அமர்ந்துக்கொண்டார்கள். எனக்கு புரிந்த வரை சவாரி ஏற்றிச்செல்லும் வரிசைக்கு தான் அந்த சண்டை. அந்த பெண்ணும் வாதிட்டு அடங்கிவிட்டு என்னிடம் ”சார், நீங்க அந்த வண்டியிலே போங்க” என்று சொன்னார். எனக்கு ஒரு பக்கம் கஷ்டமாக இருந்தது. மறுபக்கம் பிடிவாதமாக அந்த ஆட்டோவிலேயே உட்கார்ந்து அந்த பெண்ணுக்கு சங்கடத்தை ஏற்படுத்தவும் விரும்பவில்லை. அதனால் அரை மனதாக இறங்கி வேறு ஆட்டோவில் போய்விட்டேன்.

அன்று மாலை என் பாலா மாமா கூப்பிட்டபோது அவரிடம் இந்த சம்பவத்தை சொன்னேன். அப்போது உடன் இருந்த என் தங்கை “நீ அந்த ஆட்டோவில் இருந்து இறங்கியிருக்க கூடாது” என்று சொன்னாள். எனது இயலாமையை சொன்னேன். ”நீ அந்த பெண் ஓட்டுநருக்காக அந்த டிரைவர்களிடம் வாதம் செய்திருக்கனும்” என்றாள் என் தங்கை. அவர்கள் ஒரே ஸ்டேண்டில் வண்டி ஓட்டுபவர்கள். அதனால் இன்று சண்டை போட்டுக்கொள்பவர்கள் நாளைக்கு விட்டுக்கொடுத்துக்கொள்வார்கள். இதற்கிடையே நான் side எடுப்பதோ, இல்லை ஒருவரை குற்றம் சாட்டுவதோ நல்லது இல்லை என்று சொன்னேன். மேலும் எனக்கு அந்த சூழலில் வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு அந்த இடத்தில் பிறகு அந்த ஸ்டேண்டில் வேறு எந்த பெண் டிரைவரையும் பார்த்ததில்லை. அதற்கு பிறகு இன்று தான் பெண் ஆட்டோ ஓட்டுநரை பார்க்கிறேன்.

நமது சமூகத்தில் பெண்கள் ஆண்களின் domain-ல் நுழைவது குறித்து பலதரப்பட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. என் உறவுக்காரப்பெண் ஒருத்திக்கு பெண் குழந்தை பிறந்தது. அவளும் அவள் கணவரும் பெண் குழந்தை தான் வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டனர். ஆனால் அவள் மாமனாரோ “பையனாக பிறந்திருந்தால் நன்றாயிருக்கும்” என்று அங்கலாய்த்துக்கொண்டார். அவரை பார்த்தபோது ”என்னங்க இன்னும் அந்த காலத்துலேயே இருக்கீங்க? இப்போ பெண் பிள்ளைகள் எல்லாம் பையன்கள் போல எல்லா விஷயத்திலும் சமமாக உள்ளார்கள்... உங்கள் மருமகள் உட்பட! ஆனால் நீங்க பையனா இருந்திருந்தா நல்லா இருக்கும்னு சொல்றீங்களே” என்று கேட்டேன். அதற்கு அவர் “ஆண் வேலை செய்யவில்லை என்றால் அவனுக்கு கல்யாணம் நடக்காது, வாழ்க்கையே இல்லை ஆனால் பெண்கள் வேலைக்கு செல்லவில்லை என்றாலும் இல்லத்தரசிகளாக இருக்கலாம்”... “பெண்கள் ஆண்களின் domain-க்குள் நுழைவதால் social imbalance ஏற்படுகிறது” என்று சொன்னார். அவர் வயதில் பெரியவர் ஆதலால் நான் மேலும் தர்கிக்கவில்லை. அவர் சொல்கிறபடியே வைத்துக்கொண்டாலும் பெண்கள் இது போல (ஆட்டோ ஓட்டுவது, சித்தாள் வேலை) உடம்பை வருத்தும் வேலைக்கு போகிறார்கள் என்றால் அவர்களுடைய குடும்பத்துக்கு ஆண்கள் வகையில் சரியாக செலவுக்கு பணம் வருவதில்லை என்பதை தானே காட்டுகிறது? பொழுதுபோக்குவதற்கு எந்த பெண்ணும் ஆட்டோ ஓட்டுவதற்கோ, சித்தாள் வேலைக்கோ செல்லப்போவதில்லை. அதனால் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வை balance செய்யவே வேலைக்கு போகிறார்கள். அவர்களை எப்படி imbalancing factor என்று சொல்லத்தோன்றுகிறதோ?

இந்த பதிவுகுறித்து இணையத்தில் தேடியபோது இந்த செய்தி கிடைத்தது. படித்துப்பாருங்கள்... உங்களுக்கு ஏதேனும் சொல்ல தோன்றினால் மறுமொழி இடவும்.

From: http://articles.timesofindia.indiatimes.com/2010-10-03/delhi/28236991_1_auto-driver-first-woman-auto-traffic-policeman

City’s first woman auto driver thrashed by cop

TNN Oct 3, 2010, 01.36am IST
NEW DELHI: Delhi's first woman auto driver, Sunita Chaudhry (32), was in for a rude shock on Friday night. She was allegedly beaten up by a traffic policeman around 10.30pm for parking at the wrong place.

Sunita, however, protests that she was just slowing down to pick up a passenger. Based on a police complaint by Sunita, a probe has been set up to investigate the role of the traffic officer, said police sources.

Sunita had reportedly just dropped a passenger from Lajpat Nagar to the New Delhi railway station when she was called by some other passengers.

After she had ferried some passengers to nearby distances, a passenger signalled her to stop near the railway station on the Paharganj side.

''I was just slowing down and hadn't even switched off my ignition when the traffic policeman came charging at me. He started slapping me and ignored my protests. I hadn't done anything wrong and was harassed for no reason. It was only after he had beaten me up several times that he realised I was not a male driver. I finally called the PCR when I gathered my wits,'' said a visibly agitated Sunita to Times City.

A medical examination on Sunita was conducted at Lady Hardinge Hospital. Police claim they are investigating the case. Sunita complained of swollen arms and shoulders after being beaten up.

Sunita, the first female auto driver of Delhi and an inspiration for other women, has been driving an auto for the past six years. Living alone in the city, she owns her auto and is used to driving at odd hours.

''I need to make a living. Nothing like this has ever happened before. I am well-informed about traffic rules and regulations. This incident has left me bewildered and angry,'' she said.