Movies
Typography

Audrey Hepburnஇந்த வருடம் ஆரம்பித்த போது மாதத்திற்கு பத்து பதிவுகள் வீதம் 120 பதிவுகள் போடவேண்டும் என்று ஒரு New Year resolution-ஏ போட்டிருந்தேன். ஆனால் கடந்த வருடத்தின் பாதி அளவை தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கும் போல. அதுவும் சினிமா சாராத பதிவுகளாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதனால் தான் இம்முறை அதிகம் சினிமா பதிவுகள் வராதது. அதற்காக நான் படங்கள் பார்ப்பதை குறைத்துவிட்டேன் என்று அர்த்தமில்லை. சொல்லப்போனால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே பார்க்கிறேன். ஆனால் அதைப் பற்றி எழுதி பக்கங்களை நிரப்புவதில்லை. இந்த வருடம் எனது படம் பார்க்கும் விதம் கொஞ்சம் மாறி உள்ளது.

ஒரு திரைப்படத்தை பார்த்து அதில் ஏதோ ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதை சார்ந்த மற்ற படங்களாக தேடிப்பார்த்து பார்க்கிறேன். ஒரு மலையாள படம் - ”காக்டெயில்” பார்த்தேன். அது எனக்கு பிடித்திருந்தது. பின்னர் அதன் விமர்சனங்களை தேடி படித்தபோது அது Butterfly on wheels என்ற படத்தின் உருவல் என்று தெரிந்தது. உடனே அதை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். இதே முறையில் Double Indemnity ('Jism' என்ற ஹிந்திப்படத்தின் மூலம்), State of the Play (’கோ’ படத்தின் மூலம்), Love in the afternoon ('எங்கேயும் காதல்’ படம் இதன் frame by frame copy) ஆகிய படங்களை பார்க்க நேர்ந்தது. அதிலும் Love in the afternoon-ன் கதாநாயகி Audrey Hepburn-ன் மீது காதலே வந்துவிட்டது. உடனே நம்முடைய ஜொள்ளு விசாரனையை துவக்க - உலகின் மிக அழகான பெண்ணாக வாசகர்களால் தேர்வு செய்யப்பட்டவர் என்று தெரிந்தது. இவருடைய பாணியை பின்பற்றி நம்முடைய (?!) வித்யா பாலன் ஒரு photoshoot செய்திருந்தார் என்ற வரலாற்று சிறப்பு மிக்க தகவல் ஒன்றும் கிடைத்தது.

Vidya in Audrey Hepburn mode

Vidya in Audrey Hepburn mode

அதிகபிரசங்கித்தனமாக எனது நண்பர் பிரபுஷங்கருக்கு Love in the afternoon-ன் பிரதியை கொடுக்க, அவர் அதை ஏற்கனவே பார்த்துவிட்டதாகவும், Audrey Hepburn நடித்த Roman Holidays படம் தமிழில் ‘மே மாதம்’ என்ற பெயரில் ஏற்கனவே வந்திருந்ததாகவும் சொன்னார். உடனே Torrent-ல் தேடு - Roman Holiday-ஐ! பின்னர் விக்கிபீடியாவில் இதைப்பற்றி தேடியபோது அவருடை பெரும்பாலான படங்கள் romantic comedies ஆக இருந்ததை அறிந்து முடிந்தவரை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். - Breakfast in Toffany, Charade, How to steal a million ஆகியவை கிடைத்தன.

சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் டக்ளாஸ் நடித்த “A perfect murder" பார்க்க நேர்ந்தது. அதை பற்றிய விமர்சனங்களை தேடியபோது அது பழம்பெரும் இயக்குநர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் இயக்கிய “Dial M for murder" படத்தின் தழுவல் என்று தெரிந்து, போடுடா Alfred Hitchcock படங்களின் download-ஐ!!!! அதற்கப்புறம் - The Birds, Rope, Rear window என தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் Hitchcock-ன் படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இப்போது எல்லாம் படம் பார்ப்பதை கூட resume-ல் போட்டுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு நான் பார்க்கும் படங்களின் தரத்தின் மீது ஒரு நம்பிக்கை.

அதே போல அகிரா குரோசோவாவின் “ராஷோமோன்” பார்த்து பிடித்துபோய் அவருடைய “Seven Samurai", "Dreams" ஆகிய படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்தேன். அப்புறம் ‘Rashomon' படத்தின் episodic format-ஐ பற்றி ஆராய்ந்து “Vantage point", "Crash" ஆகிய படங்களை பார்க்க நேர்ந்தது. இப்படியாக போய்க்கொண்டிருக்கிறது எனது திரைப்படங்களை பார்க்கும் விதம்.

ஆங்கிலம் மட்டுமல்ல, ஹிந்தியிலும் அப்படி தான். ”கூப்சூரத்” என்ற படம் பார்த்துவிட்டு அதன் இயக்குநரான ஹ்ரிஷிகேஷ் முகர்ஜீயின் படங்களை தேடிக்கொண்டிருந்தேன். கடந்த வாரம் Landmark-ல் அவரது சில படங்களையும், அவரது சமகால இயக்குநரான பாசு சட்டர்ஜீயின் படங்களின் தொகுப்பை பார்த்தவுடன் வாங்கிவிட்டேன். சினிமா சார்த்த பதிவுகள் இடம்பெறவில்லை என்ற போதும் எனது புத்தக லைப்ரரி போல DVD Collection-ம் மானாவாரிக்கு வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. அத்தனையையும் பார்த்து முடிக்க இந்த வருடம் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

{oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு!!!

Related Articles/Posts

Happy Days... {mosimage} Post K. Vishwanath, there is a huge vaccum in Telugu cinem...

Kamba Ramayanam - Translation ... I am not a hardcore religious person, but somewhere it stayed in my su...

அகிலனின் சித்திரப்பாவை... அகிலனின் சித்திரப்பாவை - தமிழுக்கு முதன்முதலில் சாகித்திய அகாடெமி விரு...

Thookku Thandanai - Edge of yo... It would have been a big loss to the literary field if Endemoori Viren...

Chocolate - Simply infectious... {mosimage} A lone guy swarmed around by a bevy of beauties in a colleg...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.