Sujatha
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஆதலினால் காதல் செய்வீர்மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இந்த படைப்பை சமீபத்தில் சென்னை ரயில் நிலைய ஹிக்கின்போத்தம்ஸில் பிடித்தேன். நாவலை பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் - Simply hilarious!!! ஆரம்பத்திலேயே கதையை யூகிக்க முடிந்தாலும், அடுத்த 142 பக்கங்களில் நம்மை கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிடுகிறார். Diametrically opposite-ஆக - காதல் அவசியமில்லை என்ற ஆரிஸ், காதலிக்கவே பிறந்த ஜோமோ, விற்பனை பிரதிநிதியான கிட்டு / கிட்டா, கல்யாணம் ஆனபின்பும் மனையுடன் கடிதத்தில் காதலிக்கும் பார்ஸ்ஸாரதி மாமா என நான்கு நண்பர்கள், அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் - அபிலாஷா, அபிராமி, ஷாலினி, கஸ்தூரி மற்றும் நீலா ஆகிய பெண்கள் என செம ரகளை. இந்த நாவலை யாரும் இன்னும் சினிமாவாக எடுக்க முயற்சிக்காதது ஆச்சரியம் தான்.

ஜோமோ அபிலாஷாவை பார்த்தவுடனேயே காதல் கொள்கிறான். அந்த போதையில் இருந்து மீளும் முன்பே அபிலாஷாவின் தந்தை அவனை சம்பந்தம் பேச அழைக்கிறார். ஆரிஸ்ஸிடம் கணக்கு பாடம் கற்க வரும் ஷாலினி அவன் மீது காதல் கொள்கிறாள். விற்பனைக்கு போன இடத்தில் கன்னடத்து பெண் போலீஸ் கஸ்தூரியுடன் காதல் கொள்கிறான். பார்ஸ்ஸாரதி மாமா தன் மனைவி நீலாவை சில நாட்களுக்கு தங்களுடைய bachelor pad-க்கு அழைத்துவர திட்டமிடுகிறார். அதே சமயத்தில் கஸ்தூரியும் ஒரு பயிற்சிக்காக சென்னைக்கு வர, ஷாலினி ஆரிஸ்ஸுடன் தான் வாழ்வேன் என்று பெட்டி படுக்கையுடன் வந்திறங்க, நண்பர்கள் வாழ்க்கையில் காதல் வந்து ஒரு கதகளி ஆட்டம் ஆடிவிட்டு போகிறது.

ஜோமோவின் காதல் ஆள் மாறாட்டத்தின் மூலம் கலகலப்பூட்டுகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு கஸ்தூரியின் கன்னட தமிழ் நாவல் நெடுக பரவி, விரவி...... ஹ! ஹா! ஹா! நீலாவின் ‘செந்தமிழ்’ கொஞ்ச நேரமே வந்தாலும் உண்மையிலேயே நகைச்சுவை. ஏனோ எனக்கு இந்த கதையை படிக்க படிக்க cult classic ஹிந்தி திரைப்படமான “ஜானே பி தோ யாரோன்” ஞாபகத்துக்கு வந்தது. அப்படி ஒரு unabashed நகைச்சுவை நடை. குறிப்பாக இதிலும் கிளைமேக்ஸ் செம கலாட்டா. அதிலே கிளைமேக்ஸ் ஒரு மகாபாரத நாடகத்தில் என்றால் இங்கே ஒரு சர்க்கஸ்.

ஆ.கா.செபொதுவாக சுஜாதாவின் கதைகள் கொஞ்சம் சீரியஸாக இருக்கும் ஆனால் முற்றிலும் எதிர்பாராத விதமாக இங்கே ஒரு mindless caper இனிய அதிர்ச்சி என்று கூட சொல்லலாம். முழுநீள நகைச்சுவையாக தொய்வில்லாமல் கொண்டு போயிருப்பதே நல்ல விஷயம். முடிந்தால் கட்டாயம் படித்து பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் கிச்சுகிச்சு மூட்டப்பட்டிருக்கும். இது குமுதத்தில் தொடராக வெளிவந்திருந்ததாம். எனினும் ஒரே மூச்சில் படிக்கும்போது தான் மிக சுவாரசியமாக இருப்பதாக ஒரு அபிப்பிராயம். Don't miss it!!!

பதிப்பாளர்கள்: விசா பதிப்பாளர்கள், தி. நகர், சென்னை - 17. போன்: 24342899
பக்கங்கள்: 144
விலை: ரூ. 50/-

{oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு!!!