Ramblings
Typography

Aadhiஎங்கள் புட்டுவை நாங்கள் செல்லமாக “குட்டி பூ” என்று கூப்பிடுவது உண்டு. அவன் பிறந்த சமயத்தில் அழகிய புஷ்பம் போல மெலிதாக, அழகாக இருந்ததால் அப்படி கூப்பிட ஆரம்பித்தோம். அப்படி கூப்பிடுவது இன்னும் தொடர்கிறது. இதில் ஒரு நகைச்சுவையான சம்பவம் நடந்தது. அகிலாவின் அக்கா ஒரு நாள் நாங்கள் அவனை ”குட்டிப்பூ” என்று அழைப்பதன் காரணத்தை துப்பறிந்து கண்டுபிடித்துவிட்டாராம். நானும் அகிலாவும் கல்யாணம் ஆனதும் ஒன்றாக முதலில் பார்த்த படம் “பூ”. அதன் ஞாபகமாக நாங்கள் புட்டுவை “குட்டிப்பூ” என்று அழைக்கிறோமாம். எனக்கு சிரிப்பாக வந்தது. ஒருவேளை நாங்கள் அதே சமயத்தில் வெளிவந்திருந்த “வாரணம் ஆயிரம்” படத்தை முதலில் பார்த்திருந்தால் அவரது Logic-ல் ஆதியை “குட்டிப்பூ”வுக்கு பதிலாக ”குட்டி யானை” என்று கூப்பிட வேண்டியிருந்திருக்குமோ? (வாரணம் = யானை) புட்டூ... Great escape!!! அப்புறம்... புட்டுவின் அழகு அவன் கண்கள். “வித்யா பாலனுடைய கண்களுக்கு பிறகு நான் பார்த்த பேசும் / 'expressive" கண்கள் புட்டுவுடையது” என்று அடிக்கடி சொல்வதுண்டு. அப்படிப்பட்ட வித்யாவால் சமீபத்தில் ஒரு சின்ன ஆறுதல்.

கடந்த சில மாதங்களாகவே எனக்கு பிடிக்காத உத்தியோகத்தை செய்துக்கொண்டிருப்பதாக ஒரு விரக்தி ஆட்கொண்டுள்ளது. எனக்கு நான் இருக்கும் SAP Consultant வேலையை மிகவும் நேசித்தாலும், அதை அனுபவித்து செய்து மகிழ முடியாத அளவுக்கு ஒரு மொக்கை project-ல் வந்து மாட்டிக்கொண்டேன் என்று கடுப்பாக உள்ளது. இந்த நேரத்தில் MSN இணையதளத்தில் வித்யா பாலனின் குறும் பேட்டி ஒன்றை படிக்க நேர்ந்தது. தான் இன்னமாதிரியான கதாபாத்திரங்கள் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதில்லையென்றும், தனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களிலிருந்து ‘சத்துள்ளது’ என்று தோன்றுவதை மட்டும் தேர்ந்தெடுத்து நடிப்பதாக சொல்லியிருந்தார். மேலும் தனக்கு மிகவும் பிடித்த நடிக்கும் வேலையை மிகவும் ரசித்து செய்துக்கொண்டிருப்பதால் வேறு வித எண்ணங்களுக்கு இடம் தராமல் சந்தோஷமாக இருக்கிறாராம் வித்யா.

Vidya Balanதனக்கு ஆரம்ப காலத்தில் மலையாளப் பட வாய்ப்புகள் வந்து பறிபோனதையும், ராசியில்லா நடிகை என்ற முத்திரை ஏற்படுத்திய தடங்கல்களையும் நினைவுகூர்ந்த வித்யா, கடவுள் அருள் இருந்தால் நமக்கு பிடித்த மாதிரியான role-கள் வந்து நம்முடைய வேலையை ரசித்து, அனுபவித்து செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லியிருந்தது ஏனோ எனக்கு ஆறுதலாக இருந்தது. நான் தற்சமயம் உள்ளாகிக்கொண்டிருக்கும் இந்த அவஸ்தையான காலக்கட்டம் முடிந்து எனது வேலையையே பொழுதுபோக்கு போல அனுபவிக்கும் assignments வரவேண்டும் என்று காத்திருக்கிறேன். வித்யாவை போல (எனது வேலையில் திறமையிருக்கும்) எனக்கும் நல்ல விதமான project கொடுத்து கடவுள் அருள்புரிவார் என்று நம்புகிறேன். ஒருவேளை கடவுள் வித்யா மூலம் எனக்கு பொறுமை காக்கவேண்டும் என்ற இந்த செய்தியை சொல்லி அனுப்பியிருக்கிறாரோ? (எது எப்படியோ... வித்யாவின் படத்தை போட ஒரு வாய்ப்பு கிடைச்சாச்சு!)

”யுத்தம் செய்” பார்த்தபோது எனக்கு வரப்போகும் இந்த சம்பவத்தை எனது விமர்சனத்தில் சொல்லவேண்டும் என்று தோன்றியது ஆனால் மறந்துவிட்டேன். அது நான் MBA படித்துக்கொண்டிருந்தபோது நடந்த சம்பவம். அப்போது தான் எனக்கு இணையம் அறிமுகமாகியிருந்ததால், எனக்கு புதுப்புது வலைமனைகளை, குறிப்பாக Philip Kotler-ன் “Marketing Management"-ல் சொல்லப்பட்ட e-commerce குறித்த வலைமனைகளை பார்ப்பதில் ஆர்வம். ஆனால் அந்த காலகட்டத்தில் இணையம் என்பது (Dirty) chat-க்கும், Porn - களை பார்ப்பதற்கு மட்டுமே என்ர தவறான எண்ணம் பரவலாக இருந்த சமயம். கோவை Town Hall பகுதியில் அமைந்த ஒரு Browsing centre-ல் அன்று browse செய்யப்போனேன்.

அதே சமயத்தில் ஒரு 70 வயதுக்கு மேற்பட்ட ஒரு முதியவர் வந்தார். Browsing center முதலாளி ஒரு வடக்கத்திய இளைஞன். அவரிடம் சென்று “தம்பி, உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே” என்று ஆரம்பித்தார்.

அந்த இளைஞரும் ஏதோ ஒரு பெயரை சொல்லி, “அவரது மகன் நான். எங்கள் வழக்கமான தொழிலான நகைக்கடையை விட்டுவிட்டு, இந்த browsing center-ஐ ஆரம்பித்திருக்கிறேன்” என்று சொன்னான்.

“ஓ! அவர் மகனா நீங்க... எனக்கு உங்க அப்பாவை நல்லா தெரியும்” என்று சொல்லிவிட்டு “எனக்கு ‘அந்த மாதிரி’ சமாச்சாரம் பாக்கனும்” என்று வழிந்தார்.

அந்த இளைஞன் என்னிடம் “நீங்க பலான சைட் பாக்கத்தானே போறீங்க... பக்கத்துல இந்த தாத்தாவையும் உட்கார வச்சுக்கோங்க” என்றார்.

எனக்கோ செம கோவம்.. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “இல்லைங்க... நான் கொஞ்சம் Notes எடுக்குறதுக்காக வந்திருக்கேன்” என்று கத்திரித்துக்கொண்டேன்.

அந்த கடையின் எடுபிடி தாத்தாவை வேறு system-க்கு அழைத்துச்சென்று HDD-ல் சேமித்துவைத்திருந்த படங்களை காட்டினான் போல. 5 நிமிஷம் கழித்து அந்த முதியவருக்கும், கடைக்கார இளைஞருக்கும் வாக்குவாதம் நடந்தது.

“நான் காசு தரமாட்டேன்” - இது அந்த முதியவர்.

“யோவ்... நீ பாக்கனும்னு கேட்டதை தான் பார்த்துட்டே இல்லை... குடுய்யா காசை”

”வயசானவன்னு என்னை ஏமாத்தாதே. அது எதுவுமே அசையவே இல்லை. நகர்ற படத்துக்கு தான் நான் காசு தருவேன்.”

“யோவ்... வயசான காலத்துல பலான படம்னு கேக்குற.. உனக்கு என்ன கிழவா மரியாதை? ஒழும்க்கு மரியாதையா காசை எடுத்து வச்சுட்டு போ..” என்று இரைந்தான் கடைக்கார இளைஞன்.

‘யுத்தம் செய்’ படத்தில் voyeuristic peep show விஷயம் வரும்போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ‘அது’ விழுந்துவிட்டாலும், பல கிழங்களுக்கு ‘ஆசை’ விழாமல் ஒட்டிக்கொண்டிருப்பதனால் தான் இது போன்ற அவலங்கள் அரங்கேறுகின்றன.

{oshits} வாசிப்புகள் இந்த பொழப்பத்த பதிவுக்கு!!!

Related Articles/Posts

Hindi nahi malum... Scenario: Mr. Iyer and Mr. Sharma get into a conversation along with...

Five years of blogging... It has been about 7 years I am with internet and 5 years as regular bl...

Unanswered Prayers..... {mosimage}Many times in our life we develop a strong liking towards a ...

RIP J. Jayalalitha - Iron Lady... My parents were Govt. school teachers in Tamilnadu, so like most of th...

ஒரு அப்பாவின் டைரியில் ஒரு பக்... பொதுவாக Indian parenting is overtly protective என்கிற அபிப்பிராயம் எனக...

About myself
Maheshwaran
Author: MaheshwaranWebsite: https://www.maheshwaran.com
I am a SAP Consultant in my late 30s, residing in the happeing IT City - Bangalore. My interests vary from reading to travelling to handicrafts to photography. My latest interest is on Body building. May be this vivid interest keeps me going in my life without getting bored.