Girls
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

சமீப காலமாக தமிழில் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல, அழகான நடிகைகளுக்கு கூட பஞ்சம் வந்துவிட்டது போல. ஒரு நடிகை எப்போது நெ. 1 நடிகை ஆவார்? ரொம்ப நாட்கள் நடித்து, திறமைகளை மேம்படுத்திக்கொண்டு, பலதரப்பட்ட வேடங்களை ஏற்று தாய்க்குலங்களின் ஆதரவை பெற்ற பிறகே முன்னணி நடிகை என்று அழைக்கப்படுவார். சாமீ... நீங்கள் நான் இன்னும் ஹைதர் அலி காலத்தில் இருக்கிறேனா என்று கிசுகிசுப்பது என் காதில் விழுகிறது. கடந்த சில வருடங்களாக ஒரு நடிகை அறிமுகம் ஆகும்போதே பட்டையை கிளப்பிக்கொண்டு அறிமுகம் ஆகவேண்டும், இல்லையென்றால் முன்னணி நடிகை ஆவது கடினம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. நக்மா, சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா, மீரா ஜாஸ்மின், ஆசின், நயனதாரா, கோபிகா என்று சமீபத்திய முன்னணிகள் அனைவருமே முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டவர்கள். அதனாலேயே ஓவர்நைட்டில் உச்சிக்கு போனவர்கள்.


'ஆசின், த்ரிஷா, நயனதாரா' - இந்த பேட்ச்சுக்கு அடுத்து ‘அதிரடி அறிமுகம்' என்று யாருமே இல்லை. அந்த பேட்ச்சும் வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது. ஆசின் பாலிவுட்டுக்கு போய்விட்டாள். த்ரிஷாவுக்கு வயது தெரிய ஆரம்பித்துவிட்டது. நயனதாராவுக்கு அந்த ‘ஐயா' ஃப்ரஷ்னெஸ் இல்லை - எல்லாம் சிம்புவின் கைங்கரியம் தான். சந்தியாவின் வளர்ச்சி மூன்று சக்கர சைக்கிளை விட மெதுவாக இருக்கிறது. பாவனாவுக்கும், பிரியாமணிக்கும் ராசி இல்லை. மீரா ஜாஸ்மினின் நடிப்புத்திறமைக்கு தகுந்த கதாபாத்திரங்கள் தமிழில் கிடைக்கவில்லை. மேலும் அம்மணி சீரியஸான ரோல்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள். கோபிகா தமிழே வேண்டாம் என்று தன் தாய்மொழியாம் மலையாளத்தில் வசதியாக செட்டில் ஆகிவிட்டார்.

{mosimage}அடுத்த கோலிவுட் ராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயா சரணும், பாலிவுட், ஹாலிவுட் படம் என்று அக்கரை பச்சைக்கு அலைபாய்கிறார். ஷ்ரேயாவுக்கு ஒடக்கான் மூஞ்சு என்றாலும், கழுத்துக்கு கீழே சரியான ஸ்ட்ரக்சர். போகிற போக்கை பார்த்தால் ‘பொல்லாதவன்' திவ்யா தான் தேறுவாள் போல. இல்லையென்றால் ‘கல்லூரி' தமன்னா முன்னுக்கு வரலாம். ஆனால் அம்மணி தெலுங்கிற்கே முக்கியத்துவம் தருவதாக கிசுகிசு. எல்லாம் டப்பு சமாச்சாரம் தான் சாமி!  இல்லையென்றால் ஏதாவது ஒரு புதுமுகம் திடீரென்று குதித்து இந்த பஞ்சத்தை போக்கவேண்டும்.

{mosimage}கடவுளே! என்ன கேடு வந்துவிட்டது இந்த கோடம்பாக்கத்துக்கு? இவர்களுக்கு நடிக்க தெரிந்த நடிகைகளை கண்டாலே ஆகாது. ஓரங்கட்டிவிடுவார்கள். நடிப்பு தான் முக்கியமான தகுதியென்றால் மீரா ஜாஸ்மினும், சினேகாவும் தான் முன்னணி நடிகைகளாகி இருப்பார்கள். ஆசின் எல்லாம் முன்னணிக்கே வந்திருக்க முடியாது. இப்போது அழகான முகங்களை கூட தேர்ந்து எடுப்பதில் தினறுகிறார்கள். படத்தில் கதையில்லையென்றாலும், நல்ல சதையை தேர்ந்தெடுப்பதில் கூட தேறாத கேசுகள் நம் தமிழ் இயக்குனர்கள். காமிராவுக்கு பின்னால் தங்களை திருப்திபடுத்தும் சுமாரான நடிகைகளே தமிழ் ரசிகர்களுக்கு போதும் என்று இந்த இயக்குனர்கள் முடிவு செய்துவிட்டார்கள் போல! கடவுளே என்னை மட்டும் காப்பாத்து. என்னை ம....ட்....டு....ம் காப்பத்து...!

இப்போதைக்கு பாலிவுட்டின் “வித்யா பாலனும், தீபிகா பதுகோனும்” தான் எனக்கு கண் கண்ட தெய்வங்கள். அங்கே கூட திறமையான கதாநாயகிகளுக்கு கடும் பஞ்சம், அதனாலேயே முன்னாள் கனவு கன்னிகளும், இந்நாள் கிழவிகளுமான மாதுரி தீக்‌ஷித், ஜூஹி சாவ்லா, ஸ்ரீதேவி, கரிஸ்மா கபூர், காஜல் என பழைய நடிகைகள் comeback செய்துக் கொண்டு இருக்கிறார்கள். என்று தனியும் இந்த சுதந்திர தாகம் என்று பாரதியார் பாடியது காரணம் இல்லாமல் நினைவுக்கு வருகிறது.