An illustrative image... Not me :-)

Health and Fitness
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

என்னோட பதிவுகளுக்கு அடியிலே வர்ற profile box-ல "my latest interest is Body building"-னு படிச்சுட்டு நான் இந்நேரத்துக்கு கஜினி சூர்யா மாதிரியோ, துப்பாக்கி வித்யுத் ஜம்வால் மாதிரியோ உடம்பு ஏத்தியிருப்பேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க (வித்யுத் ஜம்வாலுக்கு அந்த படத்துல உடம்பு காண்பிக்கிற காட்சியே இல்லைங்குறீங்களா? அவன் சட்டைய கழற்றியிருந்தா நம்ம மாட்டு டாக்டர் கதி அதோகதி தான்)... எனக்கு ஈடுபாடு வந்திருக்குன்னு தான் சொன்னேன்.. ஆனா உடம்பு ஏத்திறேன்னு சொல்லலையே. என்னடா இவன் கலைஞர் கருணநிதி "கூட்டணியிலே இடம் இல்லை.. மனதிலே இடம் ஒதுக்கியிருக்கேன்"ன்னு வார்த்தை சதிராட்டம் ஆடுறானேன்னு நினைட்டுக்காதீங்க.. நான் ஜிம்முக்கு (வரைக்கும்)போன கதைகளே சுவாரசியம்.

நான் பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது என்னோட நண்பன் செல்வராஜ் தீவிரமான அர்ணால்டு விசிறி. அவன் ரூமிலே 'Commando' Arnold Swarzenegger போஸ்டர் ஒட்டிவச்சிட்டு இதே மாதிரி ஒரு நாள் உடம்பை ஏத்தி காண்பிக்கிறேன்னு சொல்லிகிட்டே இருப்பான். நானும் அவனும் நண்பர்களா இருந்த அந்த அஞ்சு வருஷத்திலே ஏத்தி காண்பிக்கிறேன்னு சொன்னது மட்டும் தான் நடந்துச்சு.. ஆனா உடம்பிலே ஒரு தசையை கூட இப்படி அப்படி அசைச்சதே இல்லை. பழக்கதோஷமோ என்னவோ அதுக்கப்புறம் நானும் அந்த வசனத்தை சொன்னதோட சரி.. மழைக்கு கூட ஜிம் பக்கம் ஒதுங்கினது இல்லை... முதல்ல அந்த சமயத்துல கடலூர்ல ஜிம்மே இல்லைங்குறது வேற விஷயம்.

ஆனா சீரியஸா என் உடம்பை ஒரு கட்டுக்குள்ளே கொண்டு வரனும்னு நினைச்சது 2007-ல, நான் ஐ.டி துறைக்கு வந்தப்புறம் தான். அப்போ வேளச்சேரியிலே Fitness Ocean-னு ஒரு ஜிம் இருந்துச்சு.. Allsec BPO-க்கு நேரெதிர்ல இருந்துச்சு. அங்கே தான் என் வாழ்க்கையிலே முதல் தடவையா ஜிம்முக்குள்ளே என் வலது காலை வைத்தேன். முதல் நாள் warmup-க்காக 2 நிமிஷம் ஒரே இடத்துல குதிச்சிட்டே இருங்கன்னு சொன்னான். நானும் குதிக்க ஆரம்பிச்சேன்.. கொஞ்ச நேரத்துல எல்லாம் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். நமக்கு அவ்ளோ stamina. ஒரு மூனு மாசம் ஒழுங்கா போனேன்.. ஓரளவுக்கு உடம்பும் குறைஞ்சுது. அந்த சமயத்திலே வேலை விஷயமா 2 மாசம் பெங்களூரு போகவேண்டி வந்தது. அப்போ விட்டது தான்.. Fitness Ocean-க்கு டாட்டா பை பை..

ஜிம்முக்கு போறதுங்குறது எல்லாருக்கும் தோணுற விஷயம் ஆனா அதை தொடர்ந்து செய்யுறதுக்கு ஒரு தனி தைரியமும், விடா முயற்சியும் வேணும். அது வரணும்னா ஒரு பலமான உந்துதல் வேணும். அது நாம யாரையாவது impress பண்றதா இருக்கலாம், இல்லை நமக்கு பிடிச்ச மாதிரியான உடம்பு இருக்கிறவங்களை போல நாமலும் மாறனுங்குற ஆசையாகவும் இருக்கலாம். ஆனா காரணம் எதுவானாலும் அதை தொடர்ற அளவுக்கு பலமா இருக்கனும். ஜிம்முல நமக்கு உடம்பெல்லாம் வலி வரும்போது நம்மலோட ஆரம்ப வைராக்கியம் எல்லாம் உடையறதுக்கு நிறைய சாத்தியம் இருக்கு. யாரை impress பண்ணனும்னு உடற்பயிற்சியை ஆரம்பிச்சோமோ, பாதியிலேயே இவங்களுக்காக இவ்ளோ வலியை சுமக்குறது அவசியமான்னு தோணும். யாரோட உடம்பை பார்த்து ஆசைப்பட்டு உடற்பயிற்சியை ஆரம்பிச்சோமோ, அது நமக்கு எட்டாத தூரம்னு கைவிட்டுடலாம். விட்டாப்புறம்  யோசிச்சு பார்த்தா நாம கொஞ்ச நாள் தான் போயிருந்திருக்கோம்னு தெரியும். "அடடா.. இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்து போயிருந்தா வேலையாயிருக்குமே"ன்னு தோனும். அடுத்த தடவை ஒழுங்கா போகனும்னு தோணும்.

எனக்கு அடுத்த தடவை ஜிம்முக்கு போக முடிந்தது 2010-ல் பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த பின்னர். முதல் நாள் உடற்பயிற்சி செஞ்சப்புறம் அடிச்சு போட்டது போல வலிக்குங்குறதால வெள்ளிக்கிழமை ஆரம்பிச்சேன். 30 நிமிஷம் Treadmill-ல ஓடினேன். அப்புறம் elliptical bike-ல 15 நிமிஷம் ஓட்டினேன். மொத்தம் 400 கலோரி எரிச்சதா பார்த்துட்டு ஜிம்முல இருந்து வெளியே வந்தேன். அன்னைக்கு ராத்திரி என்னோட சொந்த ஊருக்கு போறதுக்காக நான் ரயில்வே ஸ்டேஷன் போனேன். அப்போ ஒரு Hide & Seek biscuit packet வாங்கி முழுசா சாப்பிட்டேன். கவரை தூக்கிப்போடுறதுக்கு முன்னாடி அதிலே Nutrition details பார்த்தேன். 540 கலோரின்னு போட்டிருந்துச்சு. அந்த biscuit packet-ஐ தவிர்த்திருக்கலாம். 400 கலோரி எரிச்சிட்டு அதுக்கு பதிலா 540 கலோரி சாப்பிட்டிருக்கேன்னு குற்ற உணர்ச்சியா இருந்துச்சு. அப்போ தான் முதல் தடவையா உடற்பயிற்சிக்கு சாப்பாடு சரியா இருக்கனும்னு தோணுச்சு.

அடுத்த மூணு மாசத்துக்கு நான் எண்ணெய் பதார்த்தங்களை, தாளிப்பை, இட்லி பொடியிலே எண்ணெயை எல்லாம் தவிர்த்துட்டு பத்திய சாப்பாடு சாப்பிட்டேன். ரொம்ப நிறைய Cardios செஞ்சேன். பயங்கரமா உடம்பு குறைஞ்சுது. எவ்ளோ குறைஞ்சுதுன்னா என்னோட Trainer-ஏ என்னை இனிமே ஜிம்முக்கு வராதீங்கன்னு சொல்ற அளவுக்கு குறைஞ்சுது. இதுக்கு வெறும் உடற்பயிற்சி மட்டும் காரணமில்லை. சரியான சாப்பாடு இல்லாததாலும், வேலையிலே பிரச்சினையாலே மன அழுத்தம் காரணமாகவும் உடம்பு சோர்ந்து போயிருந்தது. இப்படியாக எனது இரண்டாவது முறை ஜிம்மும் முடிவுக்கு வந்தது.

இதுக்கப்புறம் மூணாவது தடவையா நான் ஜிம்முக்கு போனேன். அதுவும் சிட்னியிலே. இது புது அனுபவமா இருந்துச்சு. அது வரைக்கும் சினிமாவிலேயும் பத்திரிகைகளிலேயும் மட்டும் பார்த்திருந்த 6-பேக் உடம்புகளை ரத்தமும் சதையுமா இங்கே தான் முதல் தடவையா பார்த்தேன். அது பயங்கர intimidating-ஆ இருந்துச்சு. எல்லோரும் 20-25 Kg Dumbbells-ஐ அசால்ட்டா தூக்கும்போது நான் 5 kg dumbbells-ஐ வச்சு உடற்பயிற்சி பண்றதை பார்த்தா எனக்கு வெட்கமா இருக்கும். அதனாலேயே நான் ஜிம் மூடுறதுக்கு 1 மணி நேரத்துக்கு முன்னாடி போய் கூட்டம் குறைவா இருக்குற நேரத்துல செஞ்சுட்டு வருவேன். கொஞ்ச நாளுக்கு அப்புறம் என்னை போலவும் நிறைய பேர் தடுமாறிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சுது. நான் மட்டும் தனியா இல்லைன்னு தோன ஆரம்பிச்சப்புறம் என்னோட inhibitions-ஐ எல்லாம் விட்டுட்டு உடற்பயிற்சி session-களை enjoy செய்ய ஆரம்பிச்சேன்.

அதுக்கப்புறம் மழைக்காலம் ஆரம்பிச்சுடுச்சு.. தொடர்ந்து போக முடியலை. அப்புறம் இந்தியா திரும்பினேன். இப்படியா என்னோட மூன்றாவது பாகமும் முடிந்தது. ஆனாலும் உடற்பயிற்சியை இனிமேல் தொடர்ந்து செய்யனும், என்னோட குட்டிப்பையன் ஆதியையும் பழக்கிவிடனும்னு முடிவு பண்ணியிருக்கேன். அவனுக்கு இப்போவே இந்த உடற்பயிற்சி மேல இருக்குற பயம் / inhibitions போச்சுன்னா அவன் வளரும்போதே ஆரோக்கியமா வளரலாம் இல்லை? இதை தன்னோட life routine-ஆ இயல்பா ஏத்துக்கிட்டா அவனுக்கும் நல்லது தானே? அதனால இந்த தடவை வீட்டிலேயே HomeGym போடனும்னு முடிவு செஞ்சிருக்கேன். நினைக்கிறது நல்லபடியா நடக்குதான்னு பாக்கலாம்.

Related Articles