இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...
வெளிமாநிலத்திலேயோ இல்லை வெளிநாட்டிலேயோ நாம புதுசா, தனியா இருக்கும்போது நம்மோட தாய்மொழியை கேட்பது தனி சுகம். நான் சிட்னியிலே இருந்தபோ என்னோட ரூம் ஒரு மெயின் ரோட்டை ஒட்டி இருந்தது. ஒரு நாள் சோம்பேறித்தனமாக படுத்துகிடந்தபோது வெளியே சிக்னலில் நிறைய கார்கள் நின்றுக்கொண்டிருந்தது. அப்போது ஏதோ ஒரு காரில் இருந்த வந்த பாடல் சத்தம் எனக்கு முன்னமே கேட்டதாக தோன்றியது. கொஞ்சம் நேரம் போக போக அந்த இசை பிடிபட தொடங்கியது. அது காதல் கோட்டை படத்தில் வந்த "ஆணழகா.." பாடல். ஆர்வத்தோடு எழுந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன். ஏதோ ஒரு காரிலிருந்து அந்த பாடல் பயங்கர சத்தமாக ஒலித்துக்கொண்டிருந்தது.