உலகமே அந்த சிறுவனின் கோபத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறது. தன் பாட்டிக்காக அரசு அதிகாரிகளை மிரட்டிய சிறுவனின் வீடியோ காட்சிதான் இன்று உலகை வலம் வரும் மெகா வைரல் வீடீயோ.
சரி... சிறுவன் எதற்காக ஸ்டீல் ராடை துாக்கினான்?...
சீனாவின் நகர கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நகர்ப்புற மேலாண்மை படை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்கள், பிளாட்பாரங்களில் கடைபோடுவோரை அகற்றுவது இவர்களின் பணி. அப்படிதான் சாலையோரம் இருந்த ஒரு கடையை அகற்ற அதிகாரிகள் அந்த கடையின் உரிமையாளரான ஒரு வயதான பெண்மணியை மிரட்டினர்.
அப்போது கடையில் இருந்த அவரின் பேரனான குட்டிச் சிறுவன், தன் பாட்டியிடம் கோபமாக பேசிய அதிகாரிகள் மீது ஆத்திரம் கொண்டான். அங்கிருந்த ஒரு பெரிய ஸ்டீல் ராடை எடுத்துக்கொண்டு, 'என் பாட்டியைத் தொடாதே..! ஓடிவிடு' என மிரட்ட அதிகாரிகள் என்னசெய்வதென்று புரியாமல் விழித்தனர். கொஞ்ச நேரத்தில் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி சிறுவனுக்கு ஆதரவை பெற்றுத்தந்திருக்கிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அதை அழிக்க சீன அரசு முயன்றுவருகிறது.
Text: Anandha Vikatan